கொஞ்சம் technique கொஞ்சம் English - 126: Conjunction – too..to. எதிர்மறை கருத்தா?

கொஞ்சம் technique கொஞ்சம் English - 126: Conjunction – too..to. எதிர்மறை கருத்தா?
Updated on
2 min read

பாட்டி: நேற்று பார்த்த வாக்கியங்களுக்கு so... that என்கிற conjunction மட்டுமல்லாமல், வேறு ஒரு conjunction-ஐயும் பயன்படுத்த முடியும்.

உமையாள்: Too...to என்ற conjunction தானே

பாட்டி: Exactly. “So...that”, “too… to” ஆகிய இரண்டு conjunction-ம் எதிர்மறை வாக்கியங்களை வெளிப்படுத்தும்போது நாம் பயன்படுத்தலாம்.

உமையாள்: “So...that”-ல் negative word (not) வெளிப்படையாக இருக்கும். Too...to-ல் எதிர்மறை வார்த்தைகள் (negative word) வராது.

மித்ரன்: இன்னும் கொஞ்சம் விளக்கம் கொடுக்க முடியுமா பாட்டி?

பாட்டி: "அவனால் அந்த வேலையை செய்ய முடியாத அளவிற்கு சோர்வாக இருந்தான்" என்ற வாக்கியத்தை எடுத்துக் கொள்வோம்.

உமையாள்: He is so weak that he cannot do any work.

பாட்டி: இந்த வாக்கியத்தில் “so...that” என்ற conjunction-ஐ, அர்த்தத்தை மாற்றாமல் “too...to” என்ற conjunction-ஐ பயன்படுத்தியும் சொல்ல முடியும்.

இனியன்: எப்படி பாட்டி?

பாட்டி: முதலில் “so...that”-ல் வரக் கூடிய “So” விற்கு பதிலாக too வை replace செய்வோம்.

இசை: He is too weak.

பாட்டி: அடுத்து negative word -ஐ sentence-ல் இருந்து நீக்க வேண்டும். That என்ற வார்த்தைக்கு பிறகு வரக் கூடிய எதிர்மறை கருத்து (negative) என்ன?

இசை: That he cannot.

பாட்டி: இந்த வார்த்தைகளை நீக்கிவிட்டு, இதற்கு பதிலாக, to வை மட்டும் இந்த வாக்கியத்தில் வைத்தால் போதும்.

இசை: That he cannot do any work => to do any work. என்று மாறுமா?

பாட்டி: Correct.

இசை: He is too weak to do any work.

பாட்டி: இவை இரண்டும் வேறு வேறு conjunctions தான். ஆனால், பயன்பாட்டில் ஒரே அர்த்தத்தை கொண்டு வருவதற்கு, இங்கு சில வார்த்தைகளை மட்டும் மாற்றி போட்டால் போதுமானது.

(தொடரும்)

கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in