கொஞ்சம் technique கொஞ்சம் English - 125: Conjunction - So … that.பெண் குழந்தைகளை பாதுகாப்போம்

கொஞ்சம் technique கொஞ்சம் English - 125: Conjunction - So … that.பெண் குழந்தைகளை பாதுகாப்போம்
Updated on
1 min read

இசை: இன்று தேசிய பெண் குழந்தைகள் தினம்.

மித்ரன்: இப்படி ஒரு நாளா? எதற்காக இந்த நாள் அவசியம்?

உமையாள்: சில காலங்களுக்கு முன்புவரை, இந்தியாவில் ஏன் தமிழ்நாட்டில்கூட பல கிராமங்களில் பெண் குழந்தைகள் பிறந்தவுடன் கள்ளிப்பால் கொடுத்து கொன்று விடுவார்கள்.

இனியன்: என்ன சொல்லுறீங்க. குழந்தையை கொன்னுரு வங்களா?

இசை: ஆமாம். வறுமை ஒரு காரணம்.

உமையாள்: அவர்களை வளர்த்து, கல்யாணம் செய்து கொடுக்கிற அளவுக்கு தன்னிடம் பணம் இல்லை என்று சிலர் நினைப்பார்கள்.

இசை: அவளை பாதுகாத்து வளர்க்க தன்னிடம் போதுமான இருப்பிட சூழல் இல்லை என்று நினைப்பார்கள்.

உமையாள்: ஒரு பையன் அளவுக்கு பெண்ணால் வீட்டிற்கு எந்த பயனும் இல்லை என்று நினைப்பார்கள்.

இசை: அதுபோக, பெண்களால், ஆண்களைப்போல வெளியில் சென்று வேலை செய்யகூடிய உடல் பலமோ, மன பலமோ இல்லை என்று நம்பினார்கள்.

பாட்டி: பெற்றவர்களால், தங்கள் பெண் குழந்தைகளை பத்திரமாக பாதுகாக்க முடியாத அளவுக்கு மற்ற ஆண்களால் உடல் ரீதியான அச்சுறுத்தலும் இருந்தது.

உமையாள்: அதனால், எதற்கு வம்பு என்று பெண் குழந்தைகளை பிறந்தவுடன் கொல்ல ஆரம்பித்தனர்.

மித்ரன்: அச்சச்சோ.

பாட்டி: இந்த சமத்துவமின்யை சரி செய்யும் பொருட்டு, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் இந்திய அரசாங்கத்தால் தேசிய பெண் குழந்தைகள் தினம் உருவாக்கப்பட்டது.

உமையாள்: 2008-ம் ஆண்டு ஜனவரி 24 முதல், இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

பாட்டி: இப்படி காரணமும், அதனால் ஏற்படக் கூடிய விளைவையும் சொல்ல “So.. that” என்ற conjunction-ஐ பயன்படுத்தலாம்.

மித்ரன்: சரி பாட்டி.

(தொடரும்)

- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in