கொஞ்சம் technique கொஞ்சம் English - 124: Conjunction - Not only.. But also. முறுக்கு மட்டுமல்லாமல் லட்டும் வேண்டும்

கொஞ்சம் technique கொஞ்சம் English - 124: Conjunction - Not only.. But also. முறுக்கு மட்டுமல்லாமல் லட்டும் வேண்டும்
Updated on
1 min read

பாட்டி: நேற்றைய முன்தினம் “இது வேண்டும் அல்லது அது வேண்டும்” என்று விளையாடினோம்.

இசை: நேற்று “இதுவும் வேண்டாம், அதுவும் வேண்டாம்” என்று விளையாடினோம்.

பாட்டி: இன்றும் அதேபோல ஒரு விளையாட்டு விளையாடப் போகிறோம்.

இனியன்: என்ன விளையாட்டு பாட்டி?

பாட்டி: “இது மட்டுமல்லாமல் அதுவும் கூட வேண்டும் அல்லது வேண்டாம்” என்கிற conjunction.

மித்ரன்: ஆகா. செம. இதற்கு கூட ஒரு conjunction இருக்குதா!

பாட்டி: “Not only ... but also” என்கிற conjunction-ஐ இந்த மாதிரி தருணங்களில் பயன்படுத்தலாம்.

இசை: சரி, விளையாட ஆரம்பிக்கலாமா?

இனியன்: பாட்டி, எங்களுக்கு பசிக்குது. சாப்பிட என்ன இருக்குது?

பாட்டி: இனிப்பு மட்டுமல்லாமல் காரமும் கூட இருக்கிறது. என்ன வேண்டும் உங்களுக்கு?

மித்ரன்: எனக்கு முறுக்கு மட்டுமல்லாமல் லட்டும் வேண்டும். தர முடியுமா?

பாட்டி: இதோ எடுத்துக்கோங்க.

மித்ரன்: என்னுடைய tiffin box- ல் பாருங்க. தோசை மட்டுமல்லாமல் இட்லியும் கூட இருக்குது.

மித்ரன்: அட ஆமாம். அதற்கு தொட்டுக்க, சட்னி மட்டுமல்லாமல் சாம்பாரும் சேர்த்து வைச்சிருக்காங்களே.

பாட்டி: இந்த பருப்பு பொடியையும் சேர்த்து சாப்பிடுங்க.

உமையாள்: ஐ, எனக்கு பொடி ரொம்ப பிடிக்கும்.

பாட்டி: பொடிக்கு நல்லெண்ணெய் மட்டுமல்லாமல், தேங்காயெண்ணெய் சேர்த்தும் சாப்பிடலாம்.

உமையாள்: இட்லி க்கு தக்காளி சட்னி மட்டுமல்லாமல் தேங்காய் சட்னியும் கூடுதலாக சுவையை கொடுக்கும் தெரியுமா?

இசை: எனக்கு தேங்காய் சட்னியில் பொரிகடலை மட்டுமல்லாமல் நிலக்கடலை சேர்த்து அரைத்தாலும் சாப்பிட பிடிக்கும்.

மித்ரன்: எள்ளு மிட்டாய் மட்டுமல்லாமல் கடலை மிட்டாயையும் நாம் நிறைவு உணவாக எடுத்துக்கொள்ள முடியும்.

பாட்டி: All of you played well today’s word game. Keep rocking.

(தொடரும்)

கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in