

பாட்டி: நேற்று “Either… or” "இது வேண்டும் அல்லது அது வேண்டும்" பார்த்தோம். இன்றைக்கு அதற்கு அப்படியே opposite ஆக இருக்கக் கூடிய conjunction-ஐ பார்க்கப் போறோம்.
இசை: அப்போ, இன்றைக்கு நாம் பார்க்கபோகிற conjunction, இதுவும் வேண்டாம் அதுவும் வேண்டாமா?
பாட்டி: Correct. இதற்கு “Neither..nor” என்ற conjunction -ஐ நாம் பயன்படுத்த முடியும்.
உமையாள்: இரண்டு choice இருக்கும்போது, அது இரண்டுமே நமக்கு தேவை இல்லை எனில் இதனை பயன்படுத்த வேண்டுமா?
பாட்டி: You are right. நேற்று பேசியதை அப்படியே மாத்தி பேசி பார்க்கலாமா?
இசை: செம பாட்டி.
இனியன்: பாட்டி, பசிக்குது. சாப்பிட எனக்கு முறுக்கும் வேண்டாம், லட்டும் வேண்டாம். வேறு ஏதாவது குடுங்க.
பாட்டி: வீட்டில் மாவு தீர்ந்து விட்டது. அதனால் என்னால் தோசையும் சுட்டு தர முடியாது, இட்லியும் சுட்டு தர முடியாது.
மித்ரன்: அப்படின்னா, சட்னியும் அரைக்க வேண்டாம். சாம்பாரும் வைக்க வேண்டாம்.
இசை: பருப்பு மிளகு பொடி இருக்குதா பாட்டி. சோறுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
பாட்டி: இருக்குது. ஆனால், பொடிக்கு நல்லெண்ணெய்யும் இல்லை தேங்காயெண்ணெய்யும் இல்லை.
மித்ரன்: எங்களுக்கு நல்லெண்ணெயும் வேண்டாம், தேங்காயெண்ணெயும் வேண்டாம். நெய்யை கொஞ்சம் ஊத்துங்க.
இசை: எனக்கு துவையல் கொஞ்சம் அரைச்சு கொடுங்க. அதில் நிலக்கடலையும் போட வேண்டாம், பொரி கடலையையும் போட வேண்டாம்.
மித்ரன்: அக்கா, நீங்க இன்னும் concept-க்குள்ளேயே இருக்கீங்க. முதல்ல சாப்பிடுவோம். வாங்க.
உமையாள்: சோறு சாப்பிட்ட பிறகு சாப்பிட இனிப்பு எதாவது இருக்குதா?
இனியன்: சாப்பிட, எள்ளு மிட்டாயும் இல்லை, கடலை மிட்டாயும் இல்லை.
மித்ரன்: போதும் இந்த விளையாட்டு. இப்போது சாப்பிடலாம்.
(தொடரும்)
கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்