கொஞ்சம் technique கொஞ்சம் English - 122: Conjunction - Either... Or இனிப்பா அல்லது காரமா?

கொஞ்சம் technique கொஞ்சம் English - 122: Conjunction - Either... Or இனிப்பா அல்லது காரமா?
Updated on
1 min read

இனியன்: பாட்டி, எங்களுக்கு பசிக்குது. சாப்பிட என்ன இருக்குது?

பாட்டி: இனிப்பா அல்லது காரம் வேண்டுமா?

மித்ரன்: எனக்கு முறுக்கு அல்லது தட்டை வேண்டும். இருக்குதா?

பாட்டி: அது தீர்ந்துடுச்சே. தோசை அல்லது இட்லி சுட்டு தரவா?

மித்ரன்: சரி பாட்டி. தோசையே எனக்கு போதும். அதற்கு தொட்டுக்க, சட்னி அல்லது சாம்பார்ன்னு எதாவது இருக்குதா?

பாட்டி: பொடிதான் இருக்குது.

உமையாள்: ஐ, எனக்கு பொடி ரொம்ப பிடிக்கும்.

பாட்டி: பொடிக்கு நல்லெண்ணெய் வேண்டுமா அல்லது தேங்காயெண்ணெய் வேண்டுமா?

மித்ரன்: நல்லெண்ணெய் கொடுங்க எனக்கு.

இசை: எனக்கு சட்னி அல்லது சாம்பார் இல்லாமல் சாப்பிட முடியாதே.

பாட்டி: சரி, நான் அரைச்சு தரேன். உனக்கு தேங்காய் சட்னி வேண்டுமா அல்லது தக்காளி சட்னி வேண்டுமா?

இசை: தேங்காய் சட்னியே போதும் பாட்டி. அதில், கொஞ்சம் நிலக்கடலை அல்லது பொரிகடலை போட்டு சேர்த்து அரைச்சிடுங்க.

உமையாள்: எனக்கும் இப்படி செய்தால் தான் பிடிக்கும்.

இனியன்: அங்கே பாருங்க. எல்லா சாப்பாட்டையும் சீக்கிரமா செஞ்சு கொண்டு வந்துட்டாங்க.

உமையாள்: நல்ல திருப்தியா சாப்பிட்டாச்சு பாட்டி.

மித்ரன்: கடைசியா சாப்பிட, எள்ளு மிட்டாய் அல்லது கடலை மிட்டாய் இருந்தால் இன்னும் நல்லா இருக்கும்.

பாட்டி: இரண்டுமே இருக்குது. யாருக்கு என்ன வேண்டுமோ எடுத்துக்கோங்க.

மித்ரன்: Thank you பாட்டி.

பாட்டி: உங்க கிட்ட ஒரு கேள்வி. இன்று அதிகமா ஒரு conjunction பயன்படுத்தினோம். அது என்ன ன்னு சொல்லுங்க?

இசை: இது அல்லது அது. Either … Or.

பாட்டி: இதை எங்கே பயன்படுத்த வேண்டும் தெரியுமா?

உமையாள்: இரண்டு choice இருக்கும்போது, அதில் எதாவது ஒன்றை தேர்ந்தெடுக்க Either... Or பயன்படுகிறது.

பாட்டி: Very Good. நமது உரையாடலில் எங்கெல்லாம் Either .. Or பயன்படுத்தலாம் என்று கண்டுபிடியுங்க..

(தொடரும்)

கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in