

மித்ரன்: பொங்கலோ பொங்கல்.
இசை: இரண்டு பேரும் ஊருக்கு போய்ட்டு வந்தாச்சா?
மித்ரன்: Yes. பாட்டி ஊருக்கு போய், Happy and Contented (மகிழ்ச்சியாகவும், மனநிறைவாகவும்) கொண்டாடிட்டு வந்துட்டோம்.
இனியன்: பொங்கல் செய்வாங்க, சாப்பிடுவோம். தூங்குவோம். இதுல எங்கேயிருந்து வந்தது மகிழ்ச்சியும், மனநிறைவும்?
உமையாள்: எங்க பாட்டி ஊர்ல பொங்கல் மற்றும் மாட்டுப்பொங்கல் இரண்டையும் சேர்த்து கொண்டாடுவாங்க.
மித்ரன்: அங்கே, ஆறு மற்றும் வாய்க்கால் இரண்டும் ஓடுது. மறுநாள் இந்த இரண்டு இடங்களும், நாங்க விளையாடுற இடமா மாறிடும்.
உமையாள்: பொங்கல் அன்று சமைத்த கறி வகைகளை எல்லாம் ஒன்றாக சேர்த்து சூடு பண்ணி வைச்சிருப்பாங்க.
மித்ரன்: மறுநாள் மாட்டுப்பொங்கல் அன்று காலையிலே ஆத்துக்கு தண்ணீர் ஊறிய பொங்கலையும், சுண்டக் குழம்பையும் எடுத்து கொண்டு போவோம்.
உமையாள்: அந்த சாப்பாடு தீருகிற வரைக்கும் விளையாடிக்கொண்டும், குளித்துக்கொண்டும் இருப்போம்.
மித்ரன்: அப்புறம் சாயந்திரம்தான் வீட்டுக்கு வருவோம். வந்ததும் மாட்டுப்பொங்கலும், ஜல்லிக்கட்டும் சேர்ந்து நடக்கும்.
உமையாள்: அவங்க அவங்க வீட்டு மொட்டை மாடியில் இருந்து தெருவில் ஓடும் மாடு பிடி வீரர்களையும், மாடுகளையும் வேடிக்கை பார்ப்போம்.
மித்ரன்: சில சமயங்களில் ஆட்டுக்குட்டிக்கு கூட கழுத்தில் கரும்பை கட்டி விடுவாங்க. பயங்கர சிரிப்பாக இருக்கும் அப்போது.
இசை: அடுத்த வருடம் நீயும் நானும் கண்டிப்பாக பொங்கலுக்கு நம்ம பாட்டி ஊருக்கு போகணும். சரியா?
உமையாள்: இன்றைக்கு பாருங்களேன். நாம both என்கிற conjunction-ஐ இன்று அதிகமா பயன்படுத்தியிருக்கிறோம்.
இசை: இரண்டு விஷயங்களுக்கு இடையே வரக் கூடிய இணைப்பை (connection) சொல்வதற்கு both-ஐ பயன்படுத்த வேண்டும். சரி தானே?
உமையாள்: ஆமாம். நபர்களுக்கு, பொருட்களுக்கு என்று எல்லாவற்றிக்கும் both-ஐ பயன்படுத்தலாம்.
இசை: அந்த சமயத்தில், அந்த இரண்டுக்கும் உள்ள connection இன்னும் strong ஆக மாறுகிறது.
(தொடரும்)
கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்