Conjunction – As soon as. உணவை வீணாக்கலாமா?
இனியன்: எதுக்குடா சாப்பாடை கீழே கொட்டுற?
மித்ரன்: சாப்பிட முடியலைடா.
உமையாள்: அப்போ எவ்வளவு உன்னால் சாப்பிட முடியுமோ அந்த அளவுக்கு மட்டும் எடுத்திருக்க வேண்டியதுதானே.
மித்ரன்: varieties of dishes இருந்தது. பார்த்ததும் ஆசையா இருந்தது, So எல்லாத்துலயும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்தேன்.
இசை: பார்க்கிறதற்கு ஆசையா இருந்தால் எடுக்கலாமா? எவ்வளவு waste ஆகுது பாரு.
மித்ரன்: நான் மட்டுமா சாப்பிட முடியாமல் கொட்டுறேன். அங்க பாருங்க எல்லாருமே கொட்டிட்டு இருக்காங்க.
பாட்டி: இப்படி மத்தவங்களை கை காட்டி குறை சொல்லிட்டே இருந்தால், சரியா?
மித்ரன்: இல்லை பாட்டி. சாப்பாட்டை கொட்டியது தவறுதான். நான் கொஞ்சமாதான் எடுத்திருக்கணும். என்னை பார்த்து கேள்வி கேட்ட உடனே எனக்கு கோவம் வந்துருச்சு.
பாட்டி: கேள்வி கேட்ட உடன், யோசிக்கதானே செய்யணும். எதற்கு கோவம் வருது?
இனியன்: அவன் அளவுக்கு மீறி சாப்பாடை எடுத்த உடனே, எப்படியும் கடைசியில் சாப்பிட முடியாம கொட்டிடுவான்னு எனக்கு தெரிஞ்சது. அப்போதே எச்சரித்தேன்.
மித்ரன்: Sorry டா. நீ சொன்ன உடனே நான் கேட்டு இருந்தால், இப்படி வீணாக்கியிருக்க மாட்டேன்.
பாட்டி: இப்படி, ஏதாவது ஒன்று நடக்கும் நேரத்தில் மற்றொன்றும் அதனுடன் இணைந்து நடக்கிறது என்பதைக் குறிக்க எந்த conjunction பயன்படுகிறது. தெரியுமா ?
இசை: As soon as தானே.
பாட்டி: Very good.
பாட்டி: இப்போது நடந்த conversation இல் எந்த இடத்திலெல்லாம் As soon as பயன்படுத்தலாம் ன்னு யோசிச்சு பாருங்க.
(தொடரும்)
கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்
