கொஞ்சம் technique கொஞ்சம் English - 118: Conjunction - As long as. வயதானவர்களிடம் உரையாடுங்கள்

கொஞ்சம் technique கொஞ்சம் English - 118: Conjunction - As long as. வயதானவர்களிடம் உரையாடுங்கள்
Updated on
2 min read

மித்ரன்: அப்பப்பா, என்ன ஒரு குளிர். காலையில் எந்திருக்கவே முடியலை.

உமையாள்: மார்கழி மாதம் முடியும்வரை எப்படியும் குளிர் இருக்கும். அதற்கு பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமா குறைய ஆரம்பிக்கும்.

இனியன்: எனக்கும்தான் கை, கால் எல்லாம் குளிர்ல விறைச்சு போகுது. சூடு தண்ணீரை மேல ஊத்துறவரை குளிர்ல shiver ஆகிட்டுத்தான் (நடுங்கிட்டுதான்) இருப்பேன்.

மித்ரன்: எங்க பாட்டி, காலையிலே Garden-ல (தோட்டத்துல) விறகு போட்டு, பெரிய பானையில் வெந்நீர் போட ஆரம்பிச்சிடுவாங்க.

இனியன்: அப்படியா?

மித்ரன்: வீட்ல எல்லாரும் குளிச்சு முடிக்கிற வரை, அவங்க வெந்நீர் போட்டுட்டு இருப்பாங்க.

இசை: தோட்டத்துல இருந்து போடுவாங்களா? அப்போ அவங்களுக்கு மட்டும் குளிராதா? அச்சச்சோ, இது வரை நான் கேட்டதே இல்லையே. பாட்டி: நீங்க கேட்குறவரை, சில பெரியவங்க எதுவுமே சொல்ல மாட்டாங்க. அப்படியே வாழ்ந்து பழகிட்டாங்க.

மித்ரன்: Sorry பாட்டி. இன்னைக்கு போய் எங்க பாட்டிகிட்ட பேசுறேன்.

பாட்டி: ஒரு குறிப்பிட்ட காலம்வரை நடக்க கூடிய நிகழ்வையும், அதனை தொடர்ந்து நடக்கக் கூடிய மற்றொரு நிகழ்வையும் இணைக்க as long as (வரை) என்ற conjunction பயன்படுகிறது.

இனியன்: இந்த conversation-ல் எந்த இடங்களில் எல்லாம் as long as பயன்படுத்தலாம்?
பாட்டி: Very easy. இந்த conversation -ஐ மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிப்போம். கண்டுபிடித்து விடலாம்.

இனியன்: கிகிகி

(தொடரும்)
கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in