

இனியன்: என்னதான் அவசரமா இருந்தாலும், நீ எங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு போயிருக்கலாம்.
இசை: உன்னோட போட்டோ பேப்பர்-ல வந்த பிறகுதான் எங்களுக்கே தெரிஞ்சது.
மித்ரன்: பக்கத்து வீட்டு அண்ணன் காலையில் வந்து கூப்பிட்டார். வேடிக்கை பார்க்கலாம்ன்னு தான் போனேன்.
உமையாள்: மித்ரன் மராத்தான்-ல கலந்துக்கிட்டதைப் பற்றி பேசிட்டு இருக்கீங்களா?
மித்ரன்: ஆமாம் அக்கா. எல்லாரும் ஓடுறாங்கன்னு நானும் அவர் கூட ஓடினேன்.
இசை: அவனுக்கு அன்னைக்கு காலில் லேசா அடிபட்டு வேறு இருந்தது. இருந்தாலும் அவன் ஒரே மூச்சா ஓடி வந்திருக்கிறான்.
உமையாள்: எங்க எல்லாருக்கும் நீ கலந்துக்கிட்டதை பார்த்தபோது, பயங்கர ஆச்சரியம். அன்னைக்கு மழை வேற பெய்திட்டு இருந்ததே?
மித்ரன்: என்னதான் மழை பெய்திட்டு இருந்தாலும், முழுசா ஓடிறணும்னு எல்லாரும் நிக்காம ஓடினோம்.
பாட்டி: பெய்திட்டு இருந்தாலும், நாங்க ஓடினோம்ன்னு மித்ரன் இப்போது சொன்னான். இந்த இடத்தில் எந்த conjunction-ஐ பயன்படுத்தலாம் தெரியுமா?
உமையாள்: நீங்களே சொல்லுங்க பாட்டி.
பாட்டி: இருந்தாலும், ஆயினும் போன்ற அர்த்தமுடைய வார்த்தைகள் வரக் கூடிய இடங்களில் Although பயன்படுத்தலாம்.
மித்ரன்: Although it was raining, we continued our marathon run. சரியா பாட்டி?
பாட்டி: Very good Mithran.
(தொடரும்)
கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்