கொஞ்சம் technique கொஞ்சம் English - 116: Conjunction - Whether. திருவிழாவில் கலந்து / கொண்டீர்களா, இல்லையா?

கொஞ்சம் technique கொஞ்சம் English - 116: Conjunction - Whether. திருவிழாவில் கலந்து / கொண்டீர்களா, இல்லையா?
Updated on
1 min read

பாட்டி: சென்னை இலக்கியத் திருவிழா 2023-க்கு யாரெல்லாம் போயிட்டு வந்தீங்க?

மித்ரன்: போகணும்னுதான் ஆசை. சென்னைக்கு போகவே ஒரு நாள் night ஆகிடும். எங்கே போய் தங்க முடியும்ன்னு அம்மா வேண்டாம்ன்னு சொல்லிட்டாங்க.

பாட்டி: கவலையே பட வேண்டாம். பல முக்கிய நகரங்களில் இதேபோன்ற நிகழ்வை இந்த வருடம், தமிழக அரசு நடத்தப் போறாங்க.

உமையாள்: நமக்கு அருகில் நடக்கும்போது, நாம் கலந்துக்கலாம்.

மித்ரன்: அப்போ ok. அந்த சமயத்தில் அம்மா permission குடுத்தாலும், குடுக்கவிட்டாலும் நான் அப்பாவை கூட்டிட்டு கண்டிப்பா போக போறேன்.

பாட்டி: சரி. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விஷயங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கு எந்த conjunction-ஐ பயன்படுத்த வேண்டும் தெரியுமா?

இசை: Whether பாட்டி.

பாட்டி: Permission கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் என்று மித்ரன் இப்போது சொன்னான் அல்லவா. இதுபோன்ற, பதில் சரியாக தெரியாத (Yes or no) சமயங்களிலும் Whether-ஐ பயன்படுத்தலாம்.

மித்ரன்: Ok பாட்டி.

பாட்டி: Conjunction – Whether வரக் கூடிய இடங்களில், அதற்கு பதிலாக conjunction If-ஐ கூட நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மித்ரன்: அப்படியா?

பாட்டி: ஆனால், Conditional sentence வரும்போது கண்டிப்பாக if- ஐ மட்டுமே பயன்படுத்த வேண்டும். Whether-ஐ அங்கு தெரியாமல் கூட பயன்படுத்தி விடக் கூடாது.

(தொடரும்) கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in