

A Bird Saved my Life
Mulla Nasrudin was walking through the desert, and spotted a foreign holy man. Mulla went and introduced himself, and the holy man said, “I am a mystic devoted to the appreciation of all life forms—especially birds.”. “Oh, wonderful,” Mulla and replied, “I am a Mulla, and I would like to stay with you for a while so we can share teachings. And guess what a bird saved my life once!”. Delighted to hear this, the mystic agreed to share company with Mulla. As they shared their teachings, the mystic constantly asked to hear about how a bird saved Mulla’s life-but each time Mulla refused to tell the story.
One day, after the mystic pleaded and pleaded to hear the story, Mulla finally agreed.“Ok, here is how the bird saved my life,” Mulla began explaining while the mystic intently listened. “One day about six years ago, I had not eaten for a long time and was about to starve to death. Then I caught a bird and ate it. That bird saved my life!” said Mulla. The mystic was dumbstruck.
ஒரு பறவை என் உயிரைக் காப்பாற்றியது
முல்லா நஸ்ருதீன் பாலைவனத்தின் வழியாக நடந்து கொண்டிருந்தபோது ஒரு வெளிநாட்டு சாமியாரைக் கண்டார். அருகில் சென்று தன்னை அந்த சாமியாரிடம் முல்லா நஸ்ருதீன் அறிமுகப்படுத்திக் கொண்டார். அப்போது அந்த சாமியார் தான் அனைத்து உயிரினங்களையும் நேசிப்பவர். குறிப்பாக பறவை இனங்களை அர்ப்பணிப்புடன் போற்றும் ஆன்மிகவாதி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
அப்படியா அற்புதம் என்றார் முல்லா நஸ்ருதீன். நான் ஒரு முல்லா, நான் உங்களுடன் சிறிது காலம் இருக்க விரும்புகிறேன், அதன் வழியாக நாம் போதனைகளைப் பகிர்ந்து கொள்ளலாம். ஒருமுறை ஒரு பறவை என் உயிரைக் காப்பாற்றியது எந்த பறவை என்று யூகம் செய்யுங்கள் பார்க்கலாம் என்றார் முல்லா. இதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த சாமியார் முல்லா நஸ்ருதீனுடன் பழக ஒப்புக் கொண்டார். நாளடைவில் அவர்கள் இருவரும் தங்களது போதனைகளை பரிமாறிக் கொண்டனர்.
அப்போது ஒரு பறவை முல்லாவின் உயிரைக் காப்பாற்றியதைப் பற்றி கூறும்படி ஆர்வத்துடன் சாமியார் முல்லாவிடம் தொடர்ந்து கேட்க ஆரம்பித்தார். ஆனால், ஒவ்வொரு முறையும் முல்லா நஸ்ருதீன் அந்த கதையை சொல்ல மறுத்துவந்தார். ஒருநாள், கதையைக் கூறும்படி சாமியார் கெஞ்சிய பிறகு, நஸ்ருதீன் இறுதியாக அதை சொல்ல ஒப்புக் கொண்டார். பறவை எப்படி என் உயிரைக் காப்பாற்றியது என்பதை இப்போது சொல்கிறேன் கேளுங்கள் என்று ஆரம்பித்தார் முல்லா நஸ்ருதீன்.
அவர் சொல்ல வந்ததை மிகவும் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினார் ஆன்மிகவாதி. ஆறு வருடங்களுக்கு முன்பு ஒரு நாள், நான் நீண்ட நாட்களாக சாப்பிடாமல் பட்டினியால் உயிர்போகும் நிலையில் இருந்தேன். பிறகு ஒரு பறவையைப் பிடித்துச் சாப்பிட்டேன். அந்தப் பறவை என் உயிரைக் காப்பாற்றியது என்றார் முல்லா. அதிர்ச்சியில் வாயடைத்துப் போனார் சாமியார்.
கட்டுரையாளர்: ஆங்கிலத் துறை முன்னாள் உதவிப் பேராசிரியர்