

இசை: என்னடா, ரொம்ப நேரமா TV பார்த்துட்டு இருக்குற? Match-க்கு நேரம் ஆகுதுல்ல.
இனியன்: இந்தப் படம் ரொம்ப interesting-ஆ இருக்குது அக்கா.
மித்ரன்: அவன் வந்தால், நாம விளையாட போகலாம். இல்லாட்டி வீட்லயே இருப்போம்.
உமையாள்: போன வாரம் மட்டும் நீ விளையாட வந்திருந்தால், நம்ம அணிக்கு ஒரு point அதிகமா கிடைச்சிருக்கும்.
பாட்டி: உங்க sentence-ல் Condition-ம், dependency-ம் சேர்ந்து வர மாதிரி தெரியுதே?
இசை: ஆமாம் பாட்டி, எங்க team-ல இனியன்தான் strong player. அவன் வந்தால், இன்னைக்கு, match எங்க control-ல இருக்கும்.
பாட்டி: சரி, இந்த சமயத்தில் என்ன conjunction பயன்படுத்த வேண்டும் சொல்லுங்க.
உமையாள்: “If” பாட்டி
பாட்டி: இதில் இரண்டு types இருக்கிறது.
1. Real condition - இப்படி நடந்தால்,இப்படி ஆகும் என்று சொல்வது.
2. Unreal / Imaginary condition - இப்படி நடந்திருந்தால், இப்படி ஆகியிருக்கும் என்று சொல்வது.
(தொடரும்)
- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்