

மித்ரன்: என்ன எல்லாரும் வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க?
இனியன்: நான் சாப்பிடுறதற்கு முன்னால கை கழுவுவதற்காக வெளியே போனேன்.
அந்த தண்ணீர் குழாய் சுவர் மேல ஒரு புறா இருந்தது.
மித்ரன்: அப்புறம்?
இனியன்: அது பக்கத்துலபோய் தொடப் போனேன். ஆனால் பறக்கவே இல்லை.
மித்ரன்: அது எப்படி? நாம கிட்ட போகிறதுக்கு முன்னால் பறவைகள் ஒரு எச்சரிக்கை உணர்வோடு பறந்திடுமே.
இனியன்: ஆமாம். அதனாலதான் என்ன ஆச்சுன்னு பார்க்க அக்காவை கூப்பிட்டு காட்டிட்டு இருக்கிறேன்.
மித்ரன்: அது அழுவதுபோல தெரியுதுக்கா.
இசை: அதனுடைய இறக்கையில் காயம் பட்டிருக்கு. அதனாலதான் பறக்க முடியலை.
மித்ரன்: அச்சச்சோ. இப்போ என்ன பண்ணலாம்.
உமையாள்: பக்கத்தில் ஒரு Veterinary hospital இருக்குது. பாதுகாப்பா, இந்த புறாவை ஒரு பையில் வச்சு எடுத்துட்டு போவோம்.
இசை: நல்ல யோசனை. அவங்க சரியான treatment கொடுப்பாங்க.
பாட்டி: Excellent children. புறாவைக் காப்பாற்ற நீங்க எடுக்கக் கூடிய முயற்சிகள் மகிழ்ச்சியை கொடுக்குது. மித்ரன்: ஆமாம். Hospital-க்கு கூட்டிட்டு போனால் நிச்சயம் சரி ஆகிடும்.
பாட்டி: இன்று தேசிய பறவைகள் தினம். அது தெரியுமா எல்லாருக்கும்.
இனியன்: Wow! அது தெரியுறதுக்கு முன்னாடியே நாங்க பறவைகளுக்கு உதவி செய்ய ஆரம்பிச்சிட்டோம் பாட்டி.
பாட்டி: ஒரு நிகழ்வு (happening at first) , மற்றுமொரு நிகழ்விற்கு முன்னரே நடக்க இருக்கிறது அல்லது நடந்து விட்டது என்பதை சொல்ல, எந்த conjunction பயன்படுத்த வேண்டும். சொல்லுங்க பார்க்கலாம்.
இசை: Before பாட்டி.
பாட்டி: Very good. அப்புறம் then, first, last போன்றவார்த்தைகளை after-ஐ போலவே before உடனும் இணைத்து பயன்படுத்தக் கூடாது.
மித்ரன்: சரி பாட்டி
(தொடரும்)
- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்