கொஞ்சம் technique கொஞ்சம் English - 112: conjunction - As. இலக்கை நோக்கிப் பயணிப்போம்!

கொஞ்சம் technique கொஞ்சம் English - 112: conjunction - As. இலக்கை நோக்கிப் பயணிப்போம்!
Updated on
2 min read

பாட்டி: New year வந்தாச்சு. இந்த வருட Goals (இலக்குகள்) யாரெல்லாம் எடுத்துருக்கீங்க?

இசை: நாங்க எல்லாருமே பாட்டி.

உமையாள்: நான் தினமும் யோகா செய்யலாம்ன்னு முடிவெடுத்து இருக்கிறேன்.

இனியன்: எனக்கு Maths படிக்க சிரமமாக இருக்கிறது. தினமும் practice செய்யலாம்னு idea-ல இருக்கிறேன்.

மித்ரன்: எனக்கு காலையில் சீக்கிரம் எழும்புவதற்கு சிரமமா இருக்கிறது. தினமும் காலையில் ஆறு மணிக்கு எழும்ப வேண்டும்னு யோசிச்சு வச்சிருக்கிறேன்.

இசை: பாடப் புத்தகங்களைத் தாண்டி, வேறு ஏதாவது ஒரு library book தினமும் ஐந்து பக்கங்களாவது படிக்க வேண்டும் ன்னு நினைச்சு வச்சிருக்கிறேன்.

மித்ரன்: பாட்டி உங்க new year goal என்ன?

பாட்டி: உங்களுக்கு, வாரம் ஒரு புத்தகத்தை அறிமுகப்படுத்தலாம் என்று முடிவெடுத்து இருக்கிறேன்.

இசை: எந்த ஒரு Goal எடுத்தாலும், அதற்கு consistency and time management இரண்டும் ரொம்ப முக்கியம்னு இப்போதான் ஒரு book-ல் படிச்சேன்.

மித்ரன்: Consistency-ன்னா என்ன பாட்டி?

பாட்டி: ஒரு செயலை தொடர்ந்து தினமும் செய்ய வேண்டும். அதற்கு, நீண்ட கால அர்ப்பணிப்புடன் (dedication) நாம் செயல்பட வேண்டும்.

இனியன்: Dedication ஆ?

பாட்டி: ஆமாம். ஒரு செயலை தினமும் செய்யணும். தவறாமல் செய்யணும். தொடர்ந்து செய்யணும். 365 நாளும் செய்யணும். அதற்கு பேருதான் Dedication.

மித்ரன்: எனக்கு காலையிலதான் தூக்கம் அதிகமாக வரும். அம்மா எழுப்பும்போது, இன்னும் ஒரு 5 minutes-ன்னு சொல்லி சொல்லி 1 hourஆக்கிடுவேன்.

உமையாள்: எங்க வீட்டுல இப்படி சொன்னால், உதை விழும்.

மித்ரன்: அப்புறம் tension-ஆ school-க்கு கிளம்புவேன். எப்படியாவது அந்த பழக்கத்தை மாத்தணும்னுதான் சீக்கிரம் எந்திருக்கணும் என்பதை ஒரு Goal-ஆ எடுத்திருக்கிறேன்.

பாட்டி: காலையில் சரியான நேரத்தில் எழும்பினால், அந்த நாள் நம்ம கைக்குள்ள வர ஆரம்பிக்கும், தெரியுமா!

மித்ரன்: புரியுது பாட்டி. Consistency plays a key role here.

பாட்டி:

l இப்படி, ஏதாவது ஒன்று நடக்கும் நேரத்தில், மற்றொன்று அதனை சார்ந்து நடக்கிறது என்பதைக் குறிக்க “As” என்கிற conjunction பயன்படுகிறது.

l மேலும், As மூலமாக ஒரே நேரத்தில் நடக்கும் இரண்டு நிகழ்வுகளை நாம் அறிமுகப்படுத்துகிறோம்.

l “while” அல்லது “when” அல்லது “during that time” என்று பல்வேறு அர்த்தங்கள் இதற்கு உண்டு.

(தொடரும்)

கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in