கொஞ்சம் technique கொஞ்சம் English - 110: Conjunction – Because, அண்ணாவின் அறிவாற்றல்!

கொஞ்சம் technique கொஞ்சம் English - 110: Conjunction – Because, அண்ணாவின் அறிவாற்றல்!
Updated on
2 min read

இசை: மறுபடியும் முதலில் இருந்தா? அடடா!

பாட்டி: என்ன ஆச்சும்மா, எதைப் பார்த்து இப்படி கவலைப்படுற?

இசை: நமக்கு மறுபடியும் problem ஆரம்பிக்க போகுதுன்னு நினைக்கிறேன். ஏன்னா (ஏனெனில்) சீனாவில் புது வகையான கரோனா பரவிட்டு இருக்குதாம்.

உமையாள்: ரொம்ப மோசமான நிலையில்தான் நிறைய பேரு hospital-க்கு போயிருக்காங்க. ஏன்னா (ஏனெனில்) இந்த வகை கரோனாவுக்கு சளி, இருமல் மாதிரியான symptoms எதுவும் இல்லையாம்.

இனியன்: அச்சச்சோ, அப்புறம்?

இசை: மூட்டு வலி (Joint pain), தலைவலி (Headache), கழுத்து வலி (Neck pain), மேல் முதுகு வலி (Upper back pain) , நிமோனியா (Pneumonia), பசியின்மை (no appetite) இப்படி எதாவது இருந்தாலே எச்சரிக்கையாக சொல்லுறாங்க. ஏன்னா (ஏனெனில்) இந்த தொந்தரவு எல்லாம், புது வகை கரோனாவின் அறிகுறியாக கூட இருக்கலாமாம்.

உமையாள்: இந்த தடவை இந்திய அரசு எச்சரிக்கையா இருப்பாங்கன்னு நம்புறேன். ஏன்னா (ஏனெனில்) ஏற்கெனவே நாம கரோனாவினால நிறைய அனுபவப்பட்டு இருக்கிறோம்..

மித்ரன்: ஆமாம், அப்படியே நம்புவோம்.

பாட்டி: சில விஷயங்களை காரணத்துடன் (reason) தான் பேச முடியுது. இல்லையா?

உமையாள்: ஆமாம் பாட்டி. ஏன்னா (ஏனெனில்) காரணம் அந்த இடத்தில் அவசியமாக இருக்குது. இல்லைன்னா, அது உண்மையான்னு சந்தேகம் வரும்.

பாட்டி: Very good. எந்த conjunction-ஐ, காரணம் (reason) சொல்லும் வேளையில் நாம் பயன்படுத்த வேண்டும்?

இசை: “Because” பாட்டி.

உமையாள்: இந்த conjunction-ஐ, ஏன் (why) என்ற கேள்விக்கு பதில் சொல்லும்போது பயன்படுத்துவோம்.

இசை: ஒரு வாக்கியத்தை because வைத்தும் ஆரம்பிக்கலாம்.

பாட்டி: அப்படி ஆரம்பிக்கும்போது, அந்த வாக்கியம் ஒரு முழுமையான, சிந்தனையுள்ள வாக்கியமாக, இருக்குமாறு நாம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

Formula: because subject verb.

பாட்டி: ஒருமுறை முன்னாள் முதல்வர் அண்ணாத்துரை அவர்களிடம், அடுத்தடுத்து மூன்று because வருகிற மாதிரி யாராலும் sentence அமைக்க முடியாதுன்னு ஒருத்தர் சொல்லியிருக்கிறார். அதற்கு அவர் திருப்பி கொடுத்த பதில் என்ன தெரியுமா?

No sentence can end with because, because “because” is a conjunction.

இசை: செம பாட்டி.

(தொடரும்)

கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in