கொஞ்சம் technique கொஞ்சம் English - 109:Conjunction - But. கேள்வி எண்ணையும் சரியாக பார்க்கணும் தம்பி!

கொஞ்சம் technique கொஞ்சம் English - 109:Conjunction - But. கேள்வி எண்ணையும் சரியாக பார்க்கணும் தம்பி!
Updated on
2 min read

இசை: இன்று, டிசம்பர் 22, National Mathematics day-ன்னு newspaper-ல் போட்டுருக்காங்க.

உமையாள்: கணித மேதை இராமானுஜத்தின் பிறந்தநாளை

தேசிய கணித தினமாக (National Mathematics day) கொண்டாடுறோம்.

இனியன்: நீ என்னடா, Mathematics book-ஐ இப்படி வெறிச்சு பார்த்துட்டு இருக்கிற?

மித்ரன்: ரொம்ப நேரமா முயற்சி பண்ணுறேன். ஆனால், answer மட்டும் வர மாட்டேங்குது.

இசை: என்ன problem-ன்னு நான் பார்க்கலாமா?

இனியன்: Notebook-ல எழுதிட்டு இருக்கிறன்னு நினச்சேன். ஆனால், சிலேட்டுல எழுதிட்டு இருக்குற.

மித்ரன்: நான் solve பண்ணிட்டேன். ஆனால், book-ல வேற ஒரு answer இருக்குது. அதான் பார்த்துட்டு இருக்கிறேன்.

இனியன்: Multiplication-லதானே homework கொடுத்திருக்காங்க. ஆனால், நீ division போட்டு பார்த்துட்டு இருக்குற.

மித்ரன்: நீ சொல்லுறது correctதான். ஆனால், Madam, division நடத்த ஆரம்பிச்சிட்டாங்களே. அதான் போட்டு பார்த்துட்டு இருந்தேன்.

இசை: நான் கணக்கை சரி பார்த்துட்டேன். நீ செய்தது சரிதான்.

மித்ரன்: அப்படியா? ஆனால், புத்தகத்தில் வேற answer இருக்குதே.

இசை: நீ செய்தது 10th question. ஆனால் 11th question answer-ஐ பார்த்துட்டு இருக்குற.

மித்ரன்: அட ஆமாம். கிகிகி

இனியன்: English subject எனக்கு easy-ஆ இருக்குது. ஆனால், Mathematics தான் வரவே மாட்டேங்குது.

உமையாள்: எல்லாமே practice-ல சரி பண்ணிடலாம்.

பாட்டி: நிறைய twist வச்சு பேசிட்டு இருக்கிறதுபோல தெரியுதே.

மித்ரன்: ஆமாம் பாட்டி. கேள்வி எண்ணை தப்பா பார்த்துட்டேன்.

பாட்டி: சரி, எந்த மாதிரி conjunction, இந்த மாதிரி twist-ல பயன்படுத்தலாம் ன்னு சொல்லுங்க பார்ப்போம்.

உமையாள்: “But” தான் பாட்டி.

பாட்டி: You are right. எங்கெல்லாம் “but”-ஐ பயன்படுத்தலாம்ன்னு சொல்லுங்க?

இசை: மாறுபட்ட கருத்துகளை இணைக்க“but” பயன்படுகிறது. (It is used to connect ideas that contrast.)

உமையாள்: ஒரு வாக்கியத்தில் எதிர்பார்க்காத ஒன்றைப் பற்றித் தெரிவிக்க “but” பயன்படுகிறது. (It is used to let us know that something happened in a sentence that we did not expect.)

இசை: ஏதாவது ஒரு சாக்குப்போக்கு சொல்லும் சமயங்களில் “but” பயன்படுகிறது. (To prepare us for an excuse.)

(தொடரும்)

கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in