கொஞ்சம் technique கொஞ்சம் English - 108: Conjunction – OR யாருக்கு வெற்றி?

கொஞ்சம் technique கொஞ்சம் English - 108: Conjunction – OR யாருக்கு வெற்றி?

Published on

உமையாள்: Wow! என்ன ஒரு பரபரப்பான football match. Very Interesting!

இனியன்: Yes, True. நானும் எங்க அப்பா கூட சேர்ந்து பார்த்தேன். France-க்கு வெற்றி கிடைக்குமா அல்லது Argentina-க்கு வெற்றி கிடைக்குமான்னு கடைசி வரைக்கும் கணிக்க முடியலை.

இசை: ரெண்டு பேருமே நல்ல competitors. செமையா விளையாடினாங்க.

மித்ரன்: எனக்கு மெஸ்ஸியை ரொம்ப பிடிக்கும். மெஸ்ஸிக்காகதான் நான் match பார்த்தேன்.

இனியன்: எனக்கும்தான். முதல் goal அவர் அடிச்சா நல்லா இருக்கும்னு மனசுக்குள்ள தோணுச்சு.

மித்ரன்: மெஸ்ஸி goal அடிப்பாரா அல்லது மாட்டாரான்னு ஒரே படபடப்பாவே இருந்தது.

இனியன்: Match ஆரம்பிச்ச first second -ல இருந்தே Argentina team வெறித்தனமாக ஆட ஆரம்பிச்சிட்டாங்க.

மித்ரன்: நான் எதிர்பார்த்தபடி, first goal மெஸ்ஸிதான் அடிச்சார்.

இனியன்: Football World cup ஆரம்பிக்கிறதுக்கு முன்னால் மெஸ்ஸிக்கு 10-வது நம்பர் Jersey shirt கிடைக்குமா அல்லது கிடைக்காதான்னு எனக்கு ஒரே ஆர்வமா இருந்தது.

மித்ரன்: அதென்ன நம்பர்டா.

இனியன்: இந்த 10- வது நம்பர் Jersey shirt போட்டுதான் மரடோனா worldcup ஜெயித்தாராம்.

மித்ரன்: வெற்றியா , தோல்வியா என்பது சட்டையின் எண்ணை வைத்துதான் என்று சொல்கிறாயா?

இனியன்: கிகிகி. அதெப்படி. நன்றாக விளையாடினால்தான் trophy கிடைக்கும்.

பாட்டி: Optional questions பற்றி விவாதிக்கிறது போல தெரியுதே.

இசை: ஆமாம் பாட்டி. சரியாக பதில் தெரியாத இடங்களில் ”இது அல்லது அது” ன்னு choice லேயே பேசிட்டு இருந்தோம்.

பாட்டி: சரி. OR (அல்லது) என்கிற conjunction பற்றி உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்க, பார்க்கலாம்?

இசை: ஒன்றுக்கு மேற்பட்ட choice இருக்கும்போது அவற்றுக்கு நடுவில் பயன்படுத்தலாம். (When there is a choice)

உமையாள்: ஒன்றுக்கு மேற்பட்ட யோசனைகளுக்கு (ideas) இடையில் பயன்படுத்தலாம்.

இசை: ஒன்றுக்கு மேற்பட்ட விஷயங்களுக்கு (things) இடையில் பயன்படுத்தலாம்.

உமையாள்: நமக்கு சரியான பதில் தெரியாதபோது, options கொடுக்கக் கூடிய சமயத்தில், அவற்றுக்கு நடுவில் பயன்படுத்தலாம். (When we don’t know the answer)

பாட்டி: கேள்வி கேட்கும் போதும் பயன்படுத்தலாம். பதில் சொல்லும் போதும் பயன்படுத்தலாம்.

(தொடரும்)

கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in