

உமையாள்: பாட்டி, அன்றைக்கு அவசரமா கிளம்பி போனீங்களே. எல்லாம் சரி ஆயிடுச்சா?
மிதரன்: உங்க நினைப்பாவே இருந்தோம். உங்களை பார்த்த பிறகுதான் இப்போ எங்களுக்கு ஹாப்பி யா இருக்குது.
பாட்டி: எனக்கும் உங்க ஞாபகமாகவே இருந்தது. அதான் சீக்கிரமா கிளம்பி வந்துட்டேன்.
இசை, உமையாள்: இப்போ எக்ஸாம் நடந்துட்டு இருக்குது பாட்டி. ரெண்டு எக்ஸாம் முடிஞ்சிருக்குது.
உமையாள்: English exam இந்த தடவை ரொம்ப நல்லா எழுதியிருக்கிறோம். Questions எல்லாம் புரிஞ்சது. நாம தினமும் கொஞ்சம் techniques பார்க்கிறதுனால exam மேல எனக்கு பயமே இல்லை.
பாட்டி: அப்படியா...ரொம்ப மகிழ்ச்சி குழந்தைகளா... சரி மேற்கொண்டு இன்னைக்கு படிக்கத் தொடங்குவோம். இணைப்பு என்றால் என்ன? இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்கள், உட்பிரிவுகள், சொற்றொடர்கள் அல்லது வாக்கியங்களை இணைக்கும் ஒரு சொல் அல்லது சொற்களின் குழு இணைப்புகள் எனப்படும். இணைப்புச் சொற்கள் சேரும் சொற்கள் எனப்படும். ஆங்கிலத்தில் இதை Conjunctions-னு சொல்வாங்க. அது பற்றி புத்தகத்துல என்ன கொடுத்திருக்குனு வாசி இசை.
இசை: Conjunctions allow you to form complex, elegant sentences and avoid the choppiness of multiple short sentences. For example, I work quickly and carefully.
பாட்டி: இதுக்கு அர்த்தம் சொல்லு உமையாள்
உமையாள்: சிக்கலான, நேர்த்தியான வாக்கியங்களை உருவாக்கவும், பல குறுகிய வாக்கியங்களின் தொய்வைத் தவிர்க்கவும் இணைப்புகள் உங்களை அனுமதிக்கின்றன. உதாரணத்துக்கு, நான் விரைவாக மற்றும் கவனமாக வேலை செய்கிறேன்.
மித்ரன், இனியன்: எங்களுக்கு சுலபமா புரியிற மாதிரி நிறைய Examples-ஓட சொல்லுங்க பாட்ட
(தொடரும்)
கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்