கொஞ்சம் technique கொஞ்சம் English - 103: Adverb of purpose - இனியன் விழுந்துட்டானா? ஏன்? என்ன ஆச்சு?

கொஞ்சம் technique கொஞ்சம் English - 103: Adverb of purpose - இனியன் விழுந்துட்டானா? ஏன்? என்ன ஆச்சு?
Updated on
2 min read

பாட்டி: என்ன ஆச்சு இனியா? ஏன் அழுதுட்டே வர்ற?

இசை: ஏன்னா (ஏனெனில்) கபடி விளையாடும்போது ஒருத்தர் மேல ஒருத்தர் விழுந்துட்டாங்க பாட்டி.

இனியன்: இல்லை, இவன் வேணும்னுதான் என் மேல விழுந்தான்.

மித்ரன்: யாராவது வேணும்னே விழுவாங்களா பாட்டி.

இனியன்: நான் கபடி பாடிட்டு வந்த பிறகும் இவன் என்னை இழுத்து, என் மேல விழுந்தான். அதனால இவன் வேணும்னு விழுந்தான்னுதான் சொல்லுவேன்.

மித்ரன்: எங்க கோடு பக்கத்தில் இருந்தான். அந்த காரணத்துனாலதான் நான் தொட போனேன். இதனால நானும் கீழே விழுந்துட்டேன் பாட்டி.

உமையாள்: இனியன் அழுதுட்டு அந்த இடத்துல இருந்து கிளம்பினதுல இருந்து, நாங்களும் சோகமாயிட்டோம். அதனால நாங்களும் இவன் பின்னாடி வந்துட்டோம்.

பாட்டி: இனியா, இதெல்லாம் விளையாட்டுல சாதாரணம்ப்பா. இன்னும் வலிக்குதா உனக்கு.

இனியன்: இப்போ சரி ஆயிடுச்சு பாட்டி. கிகிகி.

பாட்டி: ஏனெனில், அதனால், எனவே, வேண்டுமென்றே, காரணமாக, இருந்து, இப்படி எல்லாம் வார்த்தைகள் இப்போது பயன்படுத்தினீங்க. இதுவும் adverbதான்.

மித்ரன்: அப்படியா?

பாட்டி: இதை adverb of purpose அல்லது adverb of reason-ன்னு சொல்லலாம்.

இனியன்: எந்த மாதிரியான இடத்திலெல்லாம் adverb of purpose வரும் பாட்டி?

பாட்டி: எங்கெல்லாம் ஏன் (why), எதற்கு (what reason) என்ற கேள்விக்கு காரணம் சொல்ல முடியுதோ, அங்கெல்லாம் adverb or purpose வரும்.

உமையாள்: ஆமாம். Playground என்ன நடந்தது, ஏன் நடந்ததுன்னு உங்களுக்கு காரணத்தை சொல்லிட்டு இருந்தோம்.

பாட்டி: இப்படி நடந்ததை, நடப்பதை, நடக்க இருப்பதை விளக்கக் கூடிய இடங்களில் எல்லாம் வரும்.

மித்ரன்: இதற்குரிய words list இருக்குதா பாட்டி?

உமையாள்: அப்படியே ஒவ்வொரு word ற்கும் ஒரு example கொடுத்திடுங்க பாட்டி.

பாட்டி: எல்லாமே ready. புரிஞ்சு படிச்சுக்கோங்க.

(தொடரும்)

கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in