கொஞ்சம் technique கொஞ்சம் English - 100: Adverb of degree - ரொம்ப பெரிய மலை!

கொஞ்சம் technique கொஞ்சம் English - 100: Adverb of degree - ரொம்ப பெரிய மலை!
Updated on
2 min read

பாட்டி: Map-க்கு கலர் கொடுத்துட்டு இருக்கிற மாதிரி தெரியுதே!

மித்ரன்: ஆமாம் பாட்டி, எனக்கு இந்த மலைகள் எல்லாம் subject-ல் வரும்போது, எங்க தாத்தா வீடுதான் ஞாபகத்தில் வரும்.

பாட்டி: அப்படியா?

மித்ரன்: ஆமாம். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், எங்க தாத்தா வீடு இருக்குது.

மித்ரன்: மேலே இருந்து பார்த்தா, ரொம்ப அழகா இருக்கும். (The view from the top is very beautiful.)

உமையாள்: நாங்க ரெண்டு பேரும் போன தடவை சேர்ந்து போனோம்.

மித்ரன்: செமையா அந்த travel-ஐ enjoy பண்ணினோம். (We totally enjoyed the ride.)

உமையாள்: வழியில் சாப்பிட popcorn வாங்கிட்டு போயிருந்தோம்.

உமையாள்: இவன் சீக்கிரமா popcorn-ஐ காலி செஞ்சிட்டான். (He ate the popcorn so quickly.)

மித்ரன்: கிகிகிகி.

பாட்டி: ரொம்ப (very) , செமையா (முழுவதும் - totally) , சீக்கிரமா (quickly) ன்னு சில வார்த்தைகள் பயன்படுத்தினீங்களே. இதுவும் adverbதான்.

மித்ரன்: ஆகா.

பாட்டி: இந்த வார்த்தைகளை adverb of degree-ன்னு சொல்லலாம்.

இனியன்: எந்த மாதிரி இடங்களில் adverb of degree வரும் பாட்டி?

பாட்டி: To what extent, how much என்ற கேள்விகளுக்கு பதில் சொல்லக் கூடிய இடங்களில் adverb of degree வரும்.

மித்ரன்: அப்படியா.

பாட்டி: ஆமாம். இந்தக் கேள்விகளை adjective, adverb, verb ஆகிய மூன்றின் மீதும் கேட்க முடியும்.

இசை: Very beautiful என்பதில் “How much” என்ற கேள்வியை adjective மீது கேட்கலாம்.

உமையாள்: Totally enjoyed என்பதில் “To what extent” என்ற கேள்வியை verb மீது கேட்கலாம்.

இசை: So quickly என்பதில் “To what extent” என்ற கேள்வியை adverb மீது கேட்கலாம்.

பாட்டி: இந்தக் கேள்விகளை வார்த்தைகளின் மீது கேட்கும்போது, அந்த வார்த்தையோட வீரியம் கூடவோ அல்லது குறையவோ செய்யும்.

மித்ரன்: எந்த வார்த்தையின் வீரியத்தை மாற்ற நினைக்கிறோமோ, அந்த வார்த்தைக்கு முன்னால் adverb of degree-ஐ பயன்படுத்தணுமா பாட்டி?

பாட்டி: உங்களுக்காக Adverb of degree – list எழுதி வச்சிருக்கிறேன். பார்த்து படிச்சுக்கோங்க.

(தொடரும்)

கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in