

பாட்டி: எல்லாரும் சேர்ந்து இப்போ தோட்டத்தை சுத்தம் செய்யலாம். வாங்க!
உமையாள்: சரி பாட்டி. நாங்க எல்லாருமே வரோம்.
மித்ரன்: நீங்க எப்போதும் தோட்டத்தை சுத்தப்படுத் திட்டேதானே இருக்கிறீங்க.
இசை: இலைகள் கீழே விழும்போது, குப்பைகள் சேர்ந்திடாம சுத்தம் செய்யணும்.
உமையாள்: அப்போதான் தண்ணீர் சரியா எல்லா செடிகளுக்கும் போய் சேரும்.
மித்ரன்: பாட்டி, அங்க இருக்குற செடிகள், கொடிகள், மரங்கள் மேல உங்களுக்கு அவ்வளவு பிரியமா?
பாட்டி: ஆமாம் டா குட்டி. பொதுவா தோட்டத்துக்குபோய் கொஞ்ச நேரம் இருந்துட்டு வந்தாலே அவ்வளவு மகிழ்ச்சியா இருக்கும்.
உமையாள்: தினமும் ஒரு தடவை செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிடணும். அப்போதான் அது நல்லா செழித்து வளரும்.
இனியன்: பாட்டி தண்ணீர் பாய்ச்சாமல் விட்டதே இல்லை தெரியுமா.
இசை: அவங்க ஊருக்கு போனால் கூட, வேறு யாரையாவது தோட்டத்தை பார்க்க ஏற்பாடு பண்ணிடுவாங்க.
பாட்டி: எப்போதும், அடிக்கடி, தினமும், ஒருதடவை கூட இல்லாமல் - இந்த வார்த்தைகளும் adverbதான் தெரியுமா? இந்த வார்த்தைகள் எல்லாம் “Adverb of frequency” என்ற category-ல் வரும்.
மித்ரன் : அப்படியா?
பாட்டி: வழக்கமாக (routine) நாம செய்யக்கூடிய எல்லா வேலைகளையும், விஷயங்களையும் “Adverb of frequency” மூலமாக நம்மால் சொல்ல முடியும்.
இசை: திரும்ப திரும்ப (repeated activities) செய்யக் கூடிய விஷயங்களையும் Adverb of frequency-ஐ பயன் படுத்தி நாம சொல்ல முடியும்.
மித்ரன்: என்னென்ன வார்த்தைகள் எல்லாம் “Adverb of frequency” யில் வரும் என்கிற list வச்சிருக்கீங்களா பாட்டி?
பாட்டி: இதோ, List உங்களுக்காக தயாராக இருக்குது. ஒவ்வொரு வார்த்தைகளையும் எந்த சமயத்தில் பயன்படுத்த லாம் என்பதை percentage ல் உங்களுக்காக எழுதி இருக்கிறேன்.
(தொடரும்)
கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்