கொஞ்சம் technique கொஞ்சம் English - 97: Prepositional adverb ம், உடைந்த பந்தும்!

கொஞ்சம் technique கொஞ்சம் English - 97: Prepositional adverb ம், உடைந்த பந்தும்!
Updated on
1 min read

இனியன்: செம cricket match இன்னைக்கு பாட்டி. அடிச்சு அடிச்சு பந்தே உடைஞ்சு போச்சு பாருங்க.

இசை: அப்படியா! அந்த பந்து எங்கே?

இனியன்: உடைஞ்ச பந்து வெளியே இருக்குது.

உமையாள்: ஆமாம் பாட்டி. அந்த broken ball-ஐ நான் பார்த்தேன்.

பாட்டி: செமையா ஒரு topic-ஐ எடுத்து குடுத்திருக்கீங்க. Prepositional adverb-ன்னா என்ன தெரியுமா?

மித்ரன்: Preposition தெரியும். அது என்ன prepositional adverb?

பாட்டி: Broken Ball எங்கேனு கேட்டதுக்கு, நீ சொன்ன பதிலை ஆங்கிலத்தில் சொல்லு.

இனியன்: The broken ball is outside the house. (Outside – preposition)

பாட்டி: நீ உள்ளே வரும்போது, broken ball-ஐ பார்த்தாய்தானே. அதை ஆங்கிலத்தில் சொல்லு.

உமையாள்: I saw the broken ball outside. (Outside – adverb)

பாட்டி: இந்த sentence-ல் உள்ள verb-ஐ நம்மால் கேள்வி கேட்க முடியுமா?

உமையாள்: Where என்கிற question-ஐ verb-ன் மேல் நம்மால் பயன்படுத்த முடியும்.

இசை: எங்கே பார்த்தாய் என்ற கேள்விக்கு வெளியே பார்த்தேன் என்கிற பதில் கிடைக்கும்.

பாட்டி: Outside என்கிற word ஆனது first sentence-ல் preposition-ஆ இருக்குது. Second sentence-ல் adverb-ஆ இருக்குது.

இனியன்: அட ஆமாம். இது preposition போலவே இருக்குது. அப்புறம் adverb ஆகவும் பயன்படுத்த முடியுதே.

மித்ரன்: அப்படின்னா, எல்லா prepositions-உம் verb-ஐ விளக்கிச் சொல்லுமா?

பாட்டி: சில prepositions-ஐதான் adverb ஆக பயன்படுத்த முடியும்.

இசை: அப்போ, எந்த மாதிரியான கேள்விகளுக்கெல்லாம் இந்த prepositional adverb மூலமா பதில் கிடைக்கும்?

பாட்டி: How?, Why?, When?, Where? என்ற கேள்விகளுக்கெல்லாம் prepositional adverb ன் மூலமா பதில் கிடைக்கும்.

மித்ரன்: சரி பாட்டி.

பாட்டி: முக்கியமாக ஒரு sentence ன் முடிவில் தான் prepositional adverb வரும். Noun க்கு முன் வராது.

(தொடரும்)

கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in