கொஞ்சம் technique கொஞ்சம் English - 96: Adverb of time பற்றி மேலும் பேசலாம்!

கொஞ்சம் technique கொஞ்சம் English - 96: Adverb of time பற்றி மேலும் பேசலாம்!
Updated on
2 min read

பாட்டி: Adverb of time-ல் When என்பதை குறிக்க பயன்படுத்தப்படும் வெவ்வேறு சொற்களை நேற்று பார்த்தோம். அதிலும் இன்னும் தெரிந்து கொள்ள எவ்வளவோ இருக்கு. இன்னைக்கு சொல்லட்டுமா?

இசை, உமையாள், இனியன், மித்ரன்: அதுக்குத்தான் காத்துக்கிட்டிருக்கோம் பாட்டி. ப்ளீஸ் சொல்லுங்க

பாட்டி: இனி மேற்கொண்டு பேசுவோம். உதாரணத்திற்கு, “நான் நேற்று நடந்தேன்” என்ற வாக்கியத்தை எடுத்துக் கொள்வோம்.

உமையாள்: I walked yesterday.

பாட்டி: எப்போது நடந்தேன் (When did I walk) என்ற கேள்வியை எழுப்பும்போது, நேற்று நடந்தேன் (Yesterday I walked) என்ற பதில் கிடைக்கிறது.

இசை: அப்படியெனில் நேற்று (Yesterday) என்பது adverb of time.

மித்ரன்: நான் எப்போதாவது தான் பாட்டி walking போவேன். இதுலயும் adverb இருக்குதா?

பாட்டி: இதை ஆங்கிலத்தில் I walk rarely என்று சொல்லுவோம். இங்கே, எப்போதாவது (rarely) என்பது ஒரு adverb of time.

மித்ரன்: அப்புறம், ly-ல் end ஆகாத Adverb of manner words list இருக்குதா பாட்டி?

பாட்டி: இதோ உங்களுக்காக கொண்டு வந்திருக்கிறேன்.

(தொடரும்)

கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in