

இனியன்: பாட்டி இந்த Newspaper-ஐ பாருங்க. Art gallery exhibition போட்டுருக்காங்க.
பாட்டி: நாளை leave தானே. நாளை போகலாம்.
உமையாள்: எங்கே போகணுமாம் அவனுக்கு.
இசை: Art gallery-க்கு போகணும் ன்னு கூப்பிட்டு இருக்கிறான்.
மித்ரன்: Art gallery-யா, அப்படின்னா என்ன?
பாட்டி: Art gallery-ஐ தமிழில் கலைக்கூடம்ன்னு சொல்லுவாங்க. இந்த இடத்துல நிறைய artists உடைய சிறந்த படைப்புகளை (Creations) கண்காட்சியில் (Exhibition) வச்சிருப்பாங்க.
இசை: Painitings, Crafts-ன்னு பார்க்கவே அழகாக இருக்கும்.
உமையாள்: சிலவற்றை விற்பனைக்கு கூட வச்சிருப்பாங்க.
இனியன்: ஒவ்வொரு drawings-உம் பார்க்க அவ்வளவு அழகா இருக்கும் தெரியுமா?
இசை: ஏற்கனவே அவனுக்கு படம் வரையுறது ரொம்ப பிடிக்கும். அதனால அங்க போறதுக்கு ஆர்வமா இருக்கிறான்.
மித்ரன்: படம் வரையுறவங்களுக்கு மட்டும்தான் பிடிக்குமா? எங்களுக்கும் வரைந்த படங்களை பார்க்க பிடிக்கும்.
இசை: எல்லாருமே சேர்ந்து நாளை போகலாம்.
பாட்டி: உங்களுக்கு ஒரு கேள்வி. நாளை போகலாம் என்பதில் adverb இருக்குதா இல்லையா?
உமையாள்: We will go tomorrow. Tomorrow (நாளை) என்பது adverb.
இசை: Adverb of time ன்னு இதை சொல்லலாம்.
உமையாள்: Adverb of time க்கு when என்கிற கேள்வி வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.
பாட்டி: We will go tomorrow என்கிற sentence ல் எப்போது (when) போகலாம் என்கிற கேள்விக்கு, நாளை போகலாம் என்கிற பதில் கிடைக்கிறது. So இங்கு நாளை (tomorrow) என்பது adverb.
(தொடரும்)
கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்