

பாட்டி: வீடே அமைதியா இருக்குது. எல்லாரும் எங்கே இருக்கீங்க?
மித்ரன்: அக்கா ரெண்டு பேரும், மாடியில் விளையாடிட்டு இருக்காங்க பாட்டி. நாங்க ரெண்டு பேரும், கீழே விளையாடிட்டு இருந்தோம்.
இனியன்: அக்கா ரெண்டு பேரும் chess விளையாடணும்னு சொன்னாங்க. நாங்க ரெண்டு பேரும் cycle ஓட்டலாம்ன்னு சொன்னோம்.
மித்ரன்: இதோ எல்லோரும் வந்துட்டாங்க பாருங்க.
பாட்டி: என்ன குட்டி team உருவாக்கி விளையாடுறது போல தெரியுதே?
உமையாள்: ஆமாம் பாட்டி, புடிச்ச விளையாட்டுக்கு playmate கிடைச்சால் jolly தானே. அப்படி தான் நாங்க ரெண்டு team ஆ விளையாட போய்ட்டோம்.
பாட்டி: நீங்க மேலே விளையாடினீங்க இல்லையா? இதில் வரக் கூடிய adverb என்ன ன்னு தெரியுமா?
இசை: மேலே என்பது adverb பாட்டி.
பாட்டி: Correct. இதை adverb of place ன்னு சொல்லுவோம்.
மித்ரன்: இன்னும் விளக்கமா சொல்லுங்க பாட்டி.
பாட்டி: அவர்கள் மாடியில் விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள்ன்னு சொன்னாய்தானே. இதை ஆங்கிலத்தில் They are playing upstairs ன்னு சொல்லுவோம்.
இசை: அவர்கள் எங்கு (where) விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள் என்ற கேள்வியை இங்கு எழுப்ப முடியும்.
உமையாள்: அதற்கு மாடியில் (upstairs) விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள் என்ற பதில் நமக்கு கிடைக்கும்.
பாட்டி: இப்படி, verb-ன் மேல் எங்கு (where) என்ற கேள்வியை நம்மால் எழுப்ப முடிந்து, அதற்கு பதில் (answer) கிடைக்குமெனில், அதை “adverb of place” என்று சொல்ல வேண்டும்.
இனியன்: இப்போல்லாம் சில friends, online-ல கூட விளையாடுறாங்க.
மித்ரன்: இதுவும் adverb of place என்கிற category-ல தான் வருமா?
பாட்டி: கண்டிப்பாக வரும். எங்கே விளையாடுகிறார்கள் என்ற கேள்வியை இங்கேயும் கேட்க முடியும். Online என்கிற பதிலும் நமக்கு கிடைக்கும்.
இனியன்: அப்போ உள்நாடு, வெளிநாடு மாதிரி “online” நாடு ன்னு ஒரு place வந்திடுமோ?
உமையாள்: அதான் ஏற்கெனவே வந்தாச்சே. இனிமேல் அதுவும் ஒரு இடம் தான்.
(தொடரும்)
கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்