

பாட்டி: வழக்கம் போல எல்லோரும் சரியான நேரத்தில் வந்தாச்சா. வாங்க வாங்க.
மித்ரன்: Evening ஒரு மணி நேரமாவது விளையாடினாதான் mind வேலை செய்யுது பாட்டி.
உமையாள்: நீங்களும் வழக்கம்போல ஒரு புத்தகத்தை எடுத்துட்டு வந்துருக்கீங்களே!
பாட்டி: ஆமாம். ஒரு மணி நேரம் நடைப்பயிற்சியை முடிச்சிட்டு வந்து, இப்போதான் புத்தகம் படிக்க உட்காந்திருக்கிறேன்.
இனியன்: நாங்களும் வழக்கம்போல விளையாடிட்டு வரோம்.
மித்ரன்: பாட்டி. இந்த இடத்தில ஒரு கேள்வி கேட்கலாமா?
பாட்டி: கேளுடா செல்லம்.
மித்ரன்: வழக்கம்போல (regularly) என்பது adverbதானே.
பாட்டி: இந்த sentence-ஐ எடுத்துக் கொள்வோம். You come regularly.
உமையாள்: நீங்கள் எப்படி (how) வருகிறீர்கள் என்ற கேள்விக்கு தவறாமல் (regularly) வருகிறீர்கள் என்ற பதில் கிடைக்கிறது.
இசை: அப்படியெனில் regularly என்பது ஒரு adverb.
மித்ரன்: இந்த adverb ஆனது positive manner category-ல் வருமா?
பாட்டி: நானும் ஒரு கேள்வி உன்கிட்ட கேட்கிறேன். அவன் தவறாமல் அந்த நாயை அடிப்பான். He beats the dog regularly. இங்கே positive manner-ல் regularly என்கிற adverb வருமா?
மித்ரன்: நாயை அடிக்குறது பாவம் இல்லையா. அதுவும் தவறாமல் அடிக்குறது என்பது எவ்வளவு பெரிய குற்றம்.
பாட்டி: ஆனால், இங்கும் தவறாமல் (regularly) வருதுதானே?
மித்ரன்: இங்கே negative manner-ல் இந்த adverb வருது.
பாட்டி: அதேதான். சில adverb-ஐ positive manner-லயும் பயன்படுத்தலாம். Negative manner-லயும் பயன்படுத்தலாம்.
இசை: அப்போ இரண்டு விதமான தருணங்களிலும் இந்த மாதிரியான adverb-ஐ பயன்படுத்தலாம்.
மித்ரன்: இப்படி பொதுவாக பயன்படுத்தக் கூடிய adverb list இருக்குதா பாட்டி?
பாட்டி: இதோ உங்களுக்காக list தயாராக இருக்குது. பார்த்து படிச்சுக்கோங்க.
(தொடரும்)
கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்