கொஞ்சம் technique கொஞ்சம் English - 92: Adverb – பசியோட class கவனிக்க முடியுமா!

கொஞ்சம் technique கொஞ்சம் English - 92: Adverb – பசியோட class கவனிக்க முடியுமா!
Updated on
2 min read

இசை: நிறைய நேரம் இங்க விளையாடிட்டோம். இப்போ நல்லா பசிக்குது.

உமையாள்: அவனைப் பாரேன். கோபமா நடக்கிறான்.

இசை: அவனுக்கு பசி வந்திருச்சு.

மித்ரன்: எனக்கும் அப்படித்தான் பசி வரும்போது, சாப்பாடு இல்லைன்னா ரொம்ப கோபமா வரும். சில நேரங்களில் அழுகை கூட வந்திடும்.

உமையாள்: அம்மா கிட்ட கேட்டா தருவாங்கதானே. அப்புறம் எதுக்கு கோபம் வருது உனக்கு?

மித்ரன்: வீட்ல எப்பவுமே சாப்பாடு இருக்கும். school-ல சில நேரத்தில special class வச்சிடுவாங்க. அந்த class முடிச்சு வீட்டுக்கு வரும்போது பசியோட நடந்து போயிருக்கேன்.

இசை: முன்னமே சொன்னாங்கன்னா, வீட்டில இருந்து கூடுதலா ஒரு snacks box எடுத்துட்டு போகலாம்.

பாட்டி: கோபமா நடக்கிறான்னு சொன்னீங்கல்ல. அதில் உள்ள adverb என்ன?

இசை: He walks angrily. Angrily (கோபமாக) என்பது adverb பாட்டி.

உமையாள்: எப்படி (how) நடக்கிறான் என்கிற கேள்விக்கு, கோபமாக நடக்கிறான் என்று ஒரு பதில் இங்கே இருக்குது.

பாட்டி: பசியுடன் நடக்கிறான்னு சொன்னீங்கல்ல. அதில் உள்ள adverb என்ன?

உமையாள்: பசியும் ஒரு adverbதான். எப்படி நடக்கிறான் (How he walks) என்ற கேள்விக்கு பசியுடன் நடக்கிறான் (He walks hungrily) என்ற பதில் கிடைக்குதே.

இசை: நேற்று positive manner-ல verb-க்கு ஒரு அர்த்தம் கொடுத்தோம்.

உமையாள்: இன்று negative manner-ல verb-க்கு ஒரு அர்த்தம் கொடுத்திருக்கிறோம்.

பாட்டி: Negative manner adverb list உங்களுக்காக தயார் செஞ்சு வச்சிருக்கிறேன்.

இனியன்: இப்படி surprise-ஆ class எதாவது வைக்கும் போது, நமக்கு எதாவது சாப்பாடு அல்லது snacks கொடுத்தாங்கன்னா சோர்வா இருக்காது, ஒழுங்கா பாடத்தை கவனிக்கவும் முடியும்.

பாட்டி: அடுத்த முறை உங்க teachers-ஐ பார்க்கும்போது உங்களுடைய பசியை பற்றி நான் சொல்லுறேன். கவலைப்படாதீங்க.

(தொடரும்)

கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in