

மித்ரன்: அங்க பாருங்க. இனியன் வேகமா போறான். கொஞ்சம் நில்லுடா. சேர்ந்து போகலாம்.
இனியன்: நான் சீக்கிரமா போய் queue-ல சேர்ந்துக்கிறேன். எல்லாருக்கும் டிக்கெட் நான் வாங்கி வச்சிடுறேன்.
உமையாள்: அப்போ சரி. நாம மெதுவா நடக்கலாம்.
மித்ரன்: அக்கா, என்ன டிக்கெட் வாங்க ஓடுறான்? Park-க்கு எதுக்கு டிக்கெட்?
இசை: புதுசா இங்க Planetarium (கோளரங்கம்) திறந்திருக்காங்க. நேத்து அதை கேள்விப்பட்டதிலிருந்து, அங்க போறதை பற்றியே பேசிட்டு இருந்தான்.
மித்ரன்: அதான் என்னை சீக்கிரமா வீட்டுக்கு வரச் சொன்னீங்களா!
உமையாள்: இன்னைக்கு Leave ஆச்சா காலையில் நம்ம மாதிரி நிறைய பேரு, இதை பார்க்க வருவாங்க.
இசை: கொஞ்சம் சீக்கிரமாக போனால் நமக்கும் பார்க்க வாய்ப்பு கிடைக்கும்.
மித்ரன்: அதுக்குள்ளையும் ticket வாங்கிட்டு வந்துட்டான் பாருங்க!
இனியன்: ஆமாம் இப்போதான் ticket counter திறந்தாங்க. முதல் ஆளா வாங்கிட்டு வந்துட்டேன்.
இசை: Show ஆரம்பிக்க இன்னும் ஒரு மணி நேரம் இருக்குது.
பாட்டி: அவன் வேகமா போறான்னு சொன்னீங்களே. இந்த sentence-ல் வேகமா என்பது எதை குறிக்குது தெரியுமா?
இசை: இதை adverb-னு சொல்லுவோம்.
உமையாள்: இது verb-ன் meaning-ஐ மாற்றி அமைக்கும். அல்லது verb-க்கு additional meaning-ஐ கொடுக்கும்.
மித்ரன்: விளக்கமாக சொல்லுங்க பாட்டி.
பாட்டி: அவன் வேகமாக நடக்கிறான் என்பதை ஆங்கிலத்தில் எப்படி சொல்லுவோம்?
மித்ரன்: He walks fast.
பாட்டி: அவன் நடக்கிறான் என்பதை எப்படி சொல்லுவீங்க?
மித்ரன்: He walks.
பாட்டி: அவன் எப்படி நடக்கிறான்?
மித்ரன்: வேகமாக நடக்கிறான்.
பாட்டி: இங்கே நடக்கிறான் (walk) என்பது verb. வேகமாக என்கிற வார்த்தை verb-ன் meaning-ஐ சற்று மாற்றுகிறது.
உமையாள்: இப்படி எந்த வார்த்தைகள் எல்லாம் verb-ன் அர்த்தத்தை மாற்றி அமைக்கிறதோ, அவற்றையெல்லாம் adverb என்று சொல்லுவோம்.
இசை: எப்படி (How?) என்கிற கேள்வி மூலமாக verb-ன் meaning இங்கு மாற்றி அமைக்கப் படுகிறது.
உமையாள்: Adverb of manner என்று இதை சொல்லலாம்..
பாட்டி: Adverb பெரும்பாலும் ly என்கிற எழுத்துக்களில் முடியும்.
மித்ரன்: அப்போ ly இல்லாமலும் adverb இருக்குதா பாட்டி.
பாட்டி: இருக்குது டா செல்லம். அடுத்ததடுத்து வரக் கூடிய நாட்களில் நாம எல்லாவற்றை பற்றியும் பார்க்கலாம்.
(தொடரும்)
கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்