கொஞ்சம் technique கொஞ்சம் English - 89: How far? நடைப்பயிற்சியை ஆரம்பிப்போம்!

கொஞ்சம் technique கொஞ்சம் English - 89: How far? நடைப்பயிற்சியை ஆரம்பிப்போம்!
Updated on
1 min read

பாட்டி: சில பழக்கங்களை நாம தொடர்ந்து செய்து வரும் போது, உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும். அதில் ஒன்றுதான் நடைப்பயிற்சி.

இனியன்: நடைப்பயிற்சியா?

மித்ரன்: நாங்க எப்போதும் நடந்துட்டுதானே இருக்கோம். இதற்கு எதற்கு தனியாக ஒரு பயிற்சி.

உமையாள்: சரியான கேள்வி. குழந்தைகளா இருக்கும் போது அதிகமா நடக்கிற நாம, பெரியவங்களா மாறும் போது கொஞ்சம் கொஞ்சமாக நடக்கிறதை குறைச்சிட்டே வரோம்.

இசை: தேவையில்லாத கொழுப்பு இந்த நேரத்திலதான் உடம்பில் சேர ஆரம்பிக்குது.

பாட்டி: நடக்கிறதை ஒரு பழக்கத்தில் கொண்டு வரும் போது, இதை எல்லாம் நம்மால் சரி செய்ய முடியும்.

மித்ரன்: எவ்வளவு தூரம் தினமும் நடக்கணும்?

பாட்டி: ஒவ்வொருவருடைய உடல் திறனை பொறுத்தது இது. தினமும் குறைந்தது 1km நடக்கிறது ஆரோக்கியமான உடலுக்கு வழி செய்யும்.

இனியன்: எவ்வளவு தூரம் என்பதை எப்படி சொல்லணும் பாட்டி?

பாட்டி: தூரம் மற்றும் தொலைவுகளை பற்றி சொல்லக் கூடிய சமயத்தில் How far என்கிற கேள்வி வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.

மித்ரன்: சரி பாட்டி.

பாட்டி: அதுபோக. ஒரு குறிப்பிட்ட தூரத்தை, கடக்கக் கூடிய அல்லது அடையக் கூடிய நேரத்தையும், How far என்கிற கேள்வியின் பதிலாக சொல்ல முடியும்.

இனியன்: நான் 2km தினமும் நடக்கப் போகிறேன்.

பாட்டி: எல்லாருமே தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை, தூரத்தை நடைப்பயிற்சிக்கு ஒதுக்கினால் நன்றாக இருக்கும்.

(தொடரும்)

கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in