

இசை: எவ்வளவு நேரமா கூப்பிட்டு இருக்கிறேன். காதுல விழுந்ததா இல்லையா?
இனியன்: கேட்கலையே. interesting-ஆ ஒரு கதை எழுதிட்டு இருக்கிறேன்.
மித்ரன்: கதையா?
இனியன்: ஆமாம். School-ல்ல சிறுகதைப் போட்டி ஒன்னு நடத்துறாங்க. அதுல நான் கலந்துக்கப் போறேன்.
மித்ரன்: எவ்வளவு நாளுக்குள்ள கதையை குடுக்கணும்?
இனியன்: ஒரு வாரம் time குடுத்திருக்காங்க. அடுத்த Monday-க்குள்ள கதையை எழுதி கொடுக்கணும்.
உமையாள்: இந்தக் கதையை எவ்வளவு நேரமா எழுதிட்டு இருக்கிற?
இனியன்: ஒரு மணி நேரமா எழுதிட்டு இருக்கேன்.
இசை: எவ்வளவு நேரத்துல கதையை எழுதி முடிக்கலாம்னு இருக்குற?
இனியன்: இன்னும் 30 நிமிடலத்துல முடிச்சிடுவேன். எவ்வளவு நேரம் நீங்க park-ல விளையாடிட்டு இருப்பீங்க?
உமையாள்: இன்னும் ஒரு மணி நேரம் விளையாடுவோம்.
பாட்டி: இப்போ நீங்க பேசிட்டு இருந்த எல்லா கேள்விகளும் நேரத்தை சார்ந்தே இருக்கிறதை கவனிச்சீங்களா?
மித்ரன்: ஆமாம் பாட்டி.
பாட்டி: இப்படி நேரம், காலம் மற்றும் அதற்கு இடைப்பட்ட கால அளவு, இவை எல்லாவற்றையும் குறிப்பதற்கு How long என்கிற கேள்வி சொல்லை பயன்படுத்துவோம்.
மித்ரன்: அப்போ How much time-ன்னு சொல்லக் கூடாதா?
பாட்டி: How much time-ன்னும் சொல்லலாம். ஆனால், How long என்று சொல்லுவது மிகவும் பொருத்தமாக இருக்கும்.
(தொடரும்)
கட்டுரையாளர்:மொழித்திறன் பயிற்றுநர்