கொஞ்சம் technique கொஞ்சம் English - 87: How much? கூடைக்கடை பாட்டியும், நெல்லிக்காயும்! :

கொஞ்சம் technique கொஞ்சம் English - 87: How much? கூடைக்கடை பாட்டியும், நெல்லிக்காயும்! :
Updated on
1 min read

பாட்டி: எல்லாரும், கையில நிறைய தின்பண்டங்களோட வரீங்க. எங்கே வாங்குனீங்க.

மித்ரன்: School-க்கு பக்கத்துல ஒரு பாட்டி கடை திறந்திருக்காங்க.

இனியன்: அவங்க, ஒரு கூடையில மொத்த கடையையும் வச்சிருந்தாங்க.

மித்ரன்: நெல்லிக்காய், குச்சி கிழங்கு, சுண்டல், முறுக்குன்னு நிறைய வச்சிருந்தாங்க.

எங்களுக்கு பிடிச்சதை நாங்க வாங்கிட்டு வந்திருக்கிறோம்.

பாட்டி: எவ்வளவு குடுத்தீங்க?

மித்ரன்: நாங்க எதுவும் கொடுக்கல பாட்டி. அவங்க தான் எங்களுக்கு தந்தாங்க.

பாட்டி: கிகிகிகி, எவ்வளவு பணம் குடுத்து தின்பண்டங்களை வாங்கினீங்கன்னு கேட்டேன்.

மித்ரன்: அப்படின்னா, இங்கேயும் எவ்வளவு (How much) தான் பயன்படுத்தணுமா?

பாட்டி: ஆமாம். பணம் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கும் How much தான் பயன்படுத்தணும்.

பாட்டி: எந்த மாதிரியான நேரங்களில் எல்லாம் பணம் பற்றிய கேள்விகள் வரும்ன்னு சொல்லுங்க பார்க்கலாம்.

உமையாள்: பொருட்களை நாம வாங்கும் போது பணம் கொடுத்து வாங்குவோம். எத்தனை பொருட்கள் வாங்குறோம் என்பதை பொறுத்து, அதற்கான பணத்தைக் கொடுப்போம்.

இசை: பொருட்களை நாம விற்கும்போது, பணத்தை நாம வாங்குவோம். எத்தனை பொருட்களை விற்கிறோம் என்பதை பொறுத்து அதற்கான பணத்தை நாம வாங்கிக்கலாம்.

உமையாள்: ஒருவரிடமிருந்து பணத்தையே வாங்கவும் செய்யலாம். கொடுக்கவும் செய்யலாம்.

மித்ரன்: Example-க்கு அப்பா, அம்மா கிட்ட பணத்தை நாம வாங்குறோம், கொடுக்கிறோம்.

இனியன்: அவங்ககிட்ட இருந்து, வாங்க மட்டும் தானே செய்யுறோம்.

மித்ரன்: சம்பாதிக்க ஆரம்பிச்ச பிறகு குடுத்துக்கலாம்.

பாட்டி: இது போக பணத்தை செலவு செய்கிற சமயத்திலும், பணம் தொடர்பான கேள்விகள் வரும்.

(தொடரும்)

கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in