கொஞ்சம் technique கொஞ்சம் English - 86: How much? மளிகைக் கடையில் எப்படி கணக்கு போடுறாங்க?

கொஞ்சம் technique கொஞ்சம் English - 86: How much? மளிகைக் கடையில் எப்படி கணக்கு போடுறாங்க?
Updated on
2 min read

இனியன்: மளிகைக் கடைக்கு, நேத்து நாங்க அம்மா கூட போயிட்டு வந்தோம்.

இசை: கடைக்காரர் எவ்வளவு அரிசி வேணும்னு கேட்டார். அதுக்கு அம்மா, 5கிலோ ன்னு சொன்னாங்க.

இனியன்: அரிசியும் uncountable noun தானே?

பாட்டி: அவரால ஒவ்வொரு அரிசியா எண்ணி கொடுக்க முடியாது. வேறு ஒரு பொருளின் உதவியோடு, எவ்வளவு அரிசி கொடுக்கணும்னு தீர்மானிக்கிறார்.

உமையாள்: அப்படின்னா , சில uncountable noun ஐ வேறு ஒரு பொருள் மூலமா நம்மால் சரியாக கணக்கிட்டு சொல்ல முடியும் ன்னு சொல்லுறீங்க.

பாட்டி: Correct. இப்படி ஒவ்வொன்றா எண்ண முடியாத பொருட்களை , எடை அளவையின் மூலமாக எவ்வளவு வேண்டும் ன்னு நம்மால் சரியாக சொல்ல முடியும்.

இசை: மில்லிகிராம், கிராம், கிலோகிராம், டன், பவுண்ட் ன்னு பலவிதமான எடைகள் இருக்குது.

பாட்டி: இதே போல liquid things (திரவப் பொருட்கள்) ஐ யும் நம்மால் அளக்க முடியும்.

உமையாள்: மில்லி லிட்டர், சென்டி லிட்டர், கிலோ லிட்டர் போன்ற பலவிதமான அளவுகள் மூலமா நம்மால் அளக்க முடியும்.

பாட்டி: அது போக, இந்த மாதிரியான பொருட்களை, எதாவது பாத்திரம் அல்லது கொள்ளளவு மூலமாகவும் நமக்கு எவ்வளவு வேண்டும் ன்னு சொல்ல முடியும்.

(தொடரும்)

கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in