கொஞ்சம் technique கொஞ்சம் English - 85: How much? அதோ வருது பூம் பூம் மாடு!

கொஞ்சம் technique கொஞ்சம் English - 85: How much? அதோ வருது பூம் பூம் மாடு!
Updated on
1 min read

இனியன்: உங்க எல்லாரையும் நான் எவ்வளவு நேரமா தேடிட்டு இருக்கிறேன், தெரியுமா?

இசை: எவ்வளவு நேரம் டா?

இனியன்: ரொம்ப நேரமா தேடிட்டு இருக்கிறேன்.

இனியன்: எங்கே போனீங்க?

மித்ரன்: தெருவில் ஒரு பூம் பூம் மாடு வந்தது. அதை, பார்க்க போனோம்.

உமையாள்: அந்த மாட்டு கழுத்துல எவ்வளவு மணிகள் போட்டிருந்தாங்க பார்த்தியா?

இனியன்: எவ்வளவு போட்டிருந்தாங்க?

மித்ரன்: நிறைய போட்டிருந்தாங்க. எல்லாமே ரொம்ப அழகா இருந்தது.

இசை: அதோட முதுகிலேயும் எவ்வளவு dress போட்டு வச்சிருந்தாங்க.

இனியன்: எவ்வளவு dress?

மித்ரன்: அந்த கணக்குலாம் தெரியல. கொஞ்சம் அதிகமா தான் இருந்தது. ஆனால் நல்ல colourful-ஆ இருந்தது.

உமையாள்: அந்த மாட்டு கொம்பை பார்த்தியா? எவ்வளவு colour அடிச்சு வச்சிருந்தாங்க?

இனியன்: எவ்வளவு colour?

மித்ரன்: எவ்வளவு colour ன்னுல்லாம் தெரியலை. பார்க்க செமையா இருந்தது.

இனியன்: எல்லாத்துக்குமே கொஞ்சம், அதிகம், அப்படிங்கிற பதில் மட்டும் சொல்லுறீங்க. சரியான எண்ணிக்கை தெரியலையா?

மித்ரன்: தெரியலையே.

பாட்டி: இப்படி சரியான எண்ணிக்கையை குறிப்பிட்டு சொல்ல முடியாத noun-ஐ uncountable noun ன்னு சொல்லுவோம்.

மித்ரன்: “எவ்வளவு” என்கிற கேள்வியைப் பற்றி சொல்லுங்க பாட்டி.

பாட்டி: Uncountable noun ஐ பற்றி கேள்வி கேட்கக் கூடிய சமயத்தில் How much (எவ்வளவு) என்கிற கேள்வியை பயன்படுத்துவோம்.

பாட்டி: How much என்கிற கேள்விக்கு, எண்ணிக்கையைச் சரியாக குறிப்பிட முடியாத சமயத்தில், இந்த வார்த்தைகள் நமக்கு பயன்படும்.

(தொடரும்)

கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in