கொஞ்சம் technique கொஞ்சம் English 84: How many யும், கேழ்வரகு உருண்டையும்!

கொஞ்சம் technique கொஞ்சம் English 84: How many யும், கேழ்வரகு உருண்டையும்!
Updated on
1 min read

பாட்டி: கருப்பட்டி சேர்த்து, கேழ்வரகு உருண்டை உங்க ளுக்காக செஞ்சு வச்சிருக்கிறேன். எடுத்து சாப்பிடுங்க.

மித்ரன்: எத்தனை உருண்டைகள் என்னால சாப்பிட முடியும் பாட்டி?

இசை: மொத்தம் எத்தனை உருண்டைகள் செஞ்சீங்க?

இனியன்: நாங்க school-க்கு எத்தனை உருண்டைகள் எடுத்துட்டு போகலாம்?

உமையாள்: இந்த tiffin box-ல் எத்தனை உருண்டைகள் வைக்க முடியும்?

இனியன்: அப்பா எத்தனை உருண்டைகள் சாப்பிட்டாங்க?

இசை: எத்தனை உருண்டைகள், முழு உருண்டையாக இருக்கிறது?

பாட்டி: அம்மாடி. எத்தனை கேள்விகள்! அடுக்கிகிட்டே போறீங்களே. கேழ்வரகு உருண்டையை சாப்பிடுங்கன்னு சொன்னது ஒரு குத்தமாய்யா. (எல்லாரும் சிரிக்கின்றனர்.)

இனியன்: இன்னைக்கு நாம எத்தனை என்கிற கேள்வியை பற்றி பார்க்க போகிறோம். சரியா பாட்டி?

பாட்டி: எல்லாருமே பேசி வச்சு preparation ஓட வந்திருக்கீங்க இன்னைக்கு. Very good.

இசை: எத்தனை என்பதற்கு ஆங்கிலத்தில் How many என்று பொருள்.

மித்ரன்: எங்கெல்லாம் How many என்கிற கேள்வியை பயன்படுத்தலாம்?

பாட்டி: நாம் ஏதாவது ஒன்றின் எண்ணிக்கையை தெரிஞ்சுக்க விரும்பும் போது How many என்கிற கேள்வியை பயன்படுத்துறோம்.

இனியன்: அப்படின்னா, அந்த எண்ணிக்கையை குறிக்கக் கூடிய இடத்தில நிறைய பொருட்களோ, விஷயங்களோ, மனிதர்களோ இருப்பாங்க ன்னு சொல்லுங்க.

இசை: இதுமட்டுமல்ல, எதையெல்லாம் எண்ண முடியுமோ அத்தனையும் how many என்கிற கேள்வி மூலமா நாம கேட்கலாம்.

பாட்டி: Absolutely. “ஒன்றுக்கு மேற்பட்ட எண்கள் உள்ள இடத்தில்” தான் How many என்கிற கேள்வியை நம்மால் எழுப்ப முடியும்.

உமையாள்: How many என்கிற கேள்விக்குக் கிடைக்கக் கூடிய பதில், countable nounஆக இருக்கும் ன்னு சொல்லுறீங்களா பாட்டி.

பாட்டி: Correct டா செல்லம். அப்புறம், கேள்வி கேட்கக் கூடிய இடத்துல plural noun (பன்மை பெயர்ச்சொற்கள்) மட்டும் தான் நாம பயன்படுத்தணும்.

(தொடரும்)

கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in