கொஞ்சம் technique கொஞ்சம் English - 83: How பற்றி தெரிஞ்சுக்கலாமா!

கொஞ்சம் technique கொஞ்சம் English - 83: How பற்றி தெரிஞ்சுக்கலாமா!
Updated on
2 min read

மித்ரன்: நிறைய techniques சொல்லிக் கொடுத்திருக்கீங்க. எப்படி பாட்டி எல்லாத்தையும் ஞாபகம் வச்சுக்கிறது?

பாட்டி: செல்லக்குட்டி, எல்லாத்தையும் ஒரேநாளில் தலையில் ஏத்த முடியாது.

இசை: தினமும் practice ரொம்ப முக்கியம்.

உமையாள்: Practice makes man perfect-ன்னு ஒரு proverb இருக்குது.

பாட்டி: இப்போ நீங்க கேட்டதுல ஒரு கேள்வி இருந்தது.

இசை: நான் கவனிச்சேன் பாட்டி. எப்படி என்பது தான் அந்த கேள்வி.

உமையாள்: How-ன்னு English-ல சொல்லலாம்.

மித்ரன்: How-ஐ எங்கெல்லாம் சரியா பயன்படுத்தணும்னு சொல்லுங்க பாட்டி.

உமையாள்: ஒருவரது உடல் நலம் அல்லது உணர்வு சார்ந்து கேள்விகள் எழுப்பும் போது How பயன்படுத்துவோம்.

பாட்டி: எப்படி (How), எவ்வாறு (How), எந்த நிலையில் (in what condition), எந்த அளவில் (to what extent), எந்த முறையில் (in what manner), எந்த விதத்தில் (in what way), எந்த வகையில் (in what way) இப்படின்னு கேள்விகள் வரக்கூடிய இடத்தில் எல்லாம் How பயன்படுத்தலாம்.

பாட்டி: common ஆ பயன்படுத்தக் கூடிய How கேள்விகளை இந்த table ஐ பார்த்து தெரிஞ்சுக்கோங்க.

பாட்டி: பெயர்ச்சொல்லை (noun) மேலும் விவரிக்க வேண்டிய இடத்தில் How உடன் Adjective உம் சேர்ந்து வரும்.

(தொடரும்)

கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in