கொஞ்சம் technique கொஞ்சம் English - 82: Which, Why - எங்கே பயன்படுத்தணும்?

கொஞ்சம் technique கொஞ்சம் English - 82: Which, Why - எங்கே பயன்படுத்தணும்?
Updated on
2 min read

பாட்டி: நான் நிறைய storybooks வாங்கிட்டு வந்திருக்கேன். இதுல எந்த book உனக்கு வேண்டும்?

இனியன்: Picture stories book இருக்குதா பாட்டி?

பாட்டி: நிறைய வாங்கியிருக்கிறேன். அதுல உனக்கு எந்த புத்தகம் வேண்டும்?

இனியன்: இதோ இந்த பெரிய எழுத்தில் இருக்கிற புத்தகத்தை நான் எடுத்துகிறேன் பாட்டி.

மித்ரன்: பாட்டி, அவனுக்கு நீங்களே ஒரு புத்தகம் எடுத்துக் கொடுக்கலாமே. அவனை ஏன் தேர்ந்தெடுக்க சொல்லுறீங்க.

பாட்டி: அவனுக்கு வேண்டிய புத்தகத்தை அவன் தானே எடுக்கணும். உனக்கு பசிச்சா நீ தானே சாப்பிடுவாய். அதேபோல அவனுக்கு வேண்டியதை அவன் தானே சொல்லணும்.

பாட்டி: நாம பேசியதில் ரெண்டு WH கேள்விகள் இருந்தது. கவனிச்சீங்களா?

மித்ரன்: எனக்கு தெரியும். ஒன்னு Why, இன்னொன்னு which

இசை: Why-ஐ எப்போ பயன்படுத்தனும் பாட்டி?

பாட்டி: காரணத்தை அல்லது நோக்கத்தை தெரிஞ்சுக்கக் கூடிய நேரத்துல ஏன் -why பயன்படுத்துவோம்.

இசை: அப்போதான் அந்த காரணத்தை நாம தெரிஞ்சுக்க முடியும். சரியா பாட்டி?

பாட்டி: Correct.

உமையாள்: Which-ஐ எங்கு பயன்படுத்தனும் பாட்டி?

பாட்டி: நிறைய பொருட்களிலிருந்து அல்லது ஆட்களிலிருந்து, துல்லியமாக ஒன்றை தேர்வு செய்ய வேண்டிய நிலையில் which-ஐ பயன்படுத்துவோம்.

உமையாள்: இன்னது/இன்னவை என்பதைத் துல்லியமாக சொல்ல which என்கிற கேள்வி ரொம்ப உதவியாக இருக்கும் என்று சொல்லுறீங்க.

பாட்டி: You are right dear.

(தொடரும்)

கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in