கொஞ்சம் technique கொஞ்சம் English - 81: When, Where பார்க்கலாமா!

கொஞ்சம் technique கொஞ்சம் English - 81: When, Where பார்க்கலாமா!
Updated on
1 min read

இனியன்: இந்த weekend எங்கே போகலாம்?

மித்ரன்: Hotelக்கு போய் சாப்பிட்டு வரலாம்.

இசை: காசு அதிகமாக செலவு ஆகுமே.

உமையாள்: இன்றைக்கு காலையில் assembly-யில் Headmaster என்ன சொன்னாங்கன்னு ஞாபகம் இருக்குதா?

மித்ரன்: அவசியமில்லாத செலவுகளை தவிர்க்கணும்னு சொன்னாங்க.

இசை: அப்புறம், hotel-க்கு போகலாமான்னு கேட்குற?

பாட்டி: எல்லார் வீட்டுல இருந்தும் ஒவ்வொரு food item கொண்டு வர சொல்லி நாம சேர்ந்து சாப்பிட்டால் எப்படி இருக்கும்?

இனியன்: செம jolly-ஆ இருக்கும் பாட்டி.

மித்ரன்: இனியன் கொண்டு வரக் கூடிய பிரியாணி எனக்கு ரொம்ப பிடிக்கும்.

இனியன்: எனக்கும் மித்ரன் கொண்டு வரக் கூடிய கருப்பட்டி ஆப்பம் ரொம்ப பிடிக்கும்.

பாட்டி: அவ்வளவுதான். நமக்கு நாமே பரிமாறிக் கொள்வோம். பெரிய அளவில் செலவு இல்லாமல் நாம நல்லா சாப்பிட முடியும்.

பாட்டி: எங்கே போகலாம்ன்னு discuss செஞ்சிங்கள்ல. அதை English-ல எப்படி சொல்லணும்.

இசை: Where will we go?

பாட்டி: இடத்தை சார்ந்து கேட்கக் கூடிய கேள்விகளுக்கு Where பயன்படுத்துவோம்.

பாட்டி: எப்போது போகலாம்னும் பேச்சு அடிபட்டதே. அதை English-ல எப்படி சொல்லணும்.

உமையாள்: When will we go?

பாட்டி: நேரம், காலம் சார்ந்து நாம கேட்கக் கூடிய கேள்விகளுக்கு When பயன்படுத்துவோம்.

(தொடரும்)

கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in