கொஞ்சம் technique கொஞ்சம் English - 77: அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்க உதவும் Verb

கொஞ்சம் technique கொஞ்சம் English - 77: அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்க உதவும் Verb
Updated on
2 min read

மித்ரன்: Modal verbs ன்னா என்ன பாட்டி?

பாட்டி: எந்த ஒரு இடத்தில் நம்ம பேசும்போது அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அந்த இடத்தில் எல்லாம் Modal verb பயன்படுத்துவோம்.

இனியன்: முக்கியத்துவமா அப்படின்னா?

உமையாள்: ஒரு விஷயம் கண்டிப்பா நடக்கணும். நிச்ச யமா நடக்கணும். அந்த விஷயம் நமக்கு ரொம்ப முக்கியம்.

பாட்டி: Possibility (சாத்தியம்), ability (திறன்), prohibition (தடை), necessity (தேவை). இந்த மாதிரியான சமயத்துல modal verbs ரொம்ப உதவியா இருக்கும்.

இனியன்: Interrogative Sentence இல் பயன்படுத்தக்கூடிய Modal Verbs என்னவெல்லாம் இருக்குது?

பாட்டி:

மித்ரன்: Examples சொல்லுறீங்களா பாட்டி?

பாட்டி:

இனியன்: சில நேரங்களில் எங்க அக்கா, என்னைப் பார்த்து “கடைக்கு போக முடியாதா?” அப்படின்னு கேக்குறாங்க. இது என்ன type of sentence?

பாட்டி: இதுக்கு பேரு interrogative negative sentence.

இசை: எல்லா sentence ற்கும் ஒரு negative sentence இருக்கும்.

பாட்டி: இப்ப நாம பார்த்த modal verbs எல்லாத்துக்கும் negative sentence உண்டு.

மித்ரன்: அப்படின்னா, tense, voice எல்லாத்துக்கும் negative sentence இருக்குமே!

பாட்டி: கண்டுபிடிச்சிட்டியே கண்ணு. கொஞ்சம் கொஞ்சமா எல்லாத்தையும் கண்டிப்பா பார்க்கலாம்.

(தொடரும்)

கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in