

இசை: Evening கடைக்கு போகலாமா?
உமையாள்: என்ன விஷயம்?
இசை: கொஞ்சம் Notebooks வாங்கணும். உன்னால என்கூட வர முடியுமா?
உமையாள்: Ok. அப்படியே நீ என்கூட Book stall வரைக்கும் வர முடியுமா? Story books கொஞ்சம் வாங்கணும்.
மித்ரன்: நாங்களும் உங்க கூட வரவா? நாங்க Book stall பார்த்ததே இல்லை.
இனியன்: எப்பவுமே அப்பா அம்மா வாங்கி கொடுப்பாங்க. அதை தான் நாங்க படித்து இருக்கிறோம்.
பாட்டி: கவலையை விடுங்க உங்க எல்லாரையும் நான் இன்னைக்கு கூட்டிட்டு போறேன்.
உமையாள்: நீங்க வந்தா எங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும்.
பாட்டி: இப்போ நீங்க பேசும் போது, அதிகமா Interrogative Sentence பயன்படுத்தி இருக்கீங்க. Interrogative Sentence னா என்னனு தெரியுமா?
இசை: வினா வாக்கியம்.
ஒருத்தருக்கொருத்தர் மாத்தி மாத்தி கேள்விகள் கேட்டீங்க தானே. இதுக்கு பேரு தான் Interrogative Sentence. 2 types இருக்குது.
1. Yes or No Questions
2. WH Questions
இனியன்: Yes or No Questions ன்னா என்ன?
இசை: இந்தக் கேள்விகளுக்கு இரண்டே பதில் தான் இருக்கும். ஒன்று Yes அல்லது No.
மித்ரன்: Yes or No Questions க்கு formula இருக்குதா?
Auxiliary Verb or Modal Verb Subject Main Verb … ?
இசை: Tense இல் பயன்படுத்தக் கூடிய Auxiliary verbs க்கு நான் table எழுதி வச்சிருக்கிறேன்.
Examples: Yes / No Questions
Simple Tense
Do you have a pencil? உங்களிடம் பென்சில் இருக்கிறதா?
Does he eat properly? அவர் சரியாக சாப்பிடுகிறாரா?
Did you complete your yoga? உங்கள் யோகாவை முடித்தீர்களா?
Shall I come with you evening? நான் உன்னுடன் வரட்டுமா?
Will he help me to finish my homework? எனது வீட்டுப்பாடத்தை முடிக்க அவர் எனக்கு உதவுவாரா?
Continuous Tense
Am I doing the work neatly? நான் வேலையை நேர்த்தியாக செய்கிறேனா?
Is he walking with you? அவர் உங்களுடன் நடக்கிறாரா?
Are they playing football? அவர்கள் கால்பந்து விளையாடுகிறார்களா?
Was she dancing yesterday? அவள் நேற்று நடனமாடினாளா?
Were you dancing last week? கடந்த வாரம் நீங்கள் நடனமாடினீர்களா?
Will you be coming with me? என்னுடன் வருவீர்களா?
Shall I be expecting you tomorrow? நாளை நான் உன்னை எதிர்பார்க்கலாமா?
Perfect Tense
Have you seen Everest? நீங்கள் எவரெஸ்ட் பார்த்திருக்கிறீர்களா?
Has he gone to Chennai? அவர் சென்னை போயிருக்கிறாரா?
Had they played cricket? அவர்கள் கிரிக்கெட் விளையாடினார்களா?
Will he have sung the song? அவர் பாடலைப் பாடியிருப்பாரா?
Shall I have made the food? நான் சாப்பாடு செய்திருக்கவா?
(தொடரும்)
கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்