கொஞ்சம் technique கொஞ்சம் English - 75: Sentence - லயும் மரியாதை முக்கியம் அமைச்சரே!

கொஞ்சம் technique கொஞ்சம் English - 75: Sentence - லயும் மரியாதை முக்கியம் அமைச்சரே!
Updated on
2 min read

இனியன்: மித்ரன் அந்த புக்கை எடு.

மித்ரன்: முடியாது.

இனியன்: எடுத்து கொடுன்னு சொல்லுறேன். முடியாதுன்னு சொல்ற.

மித்ரன்: உன் பக்கத்துலதான் இருக்குது. போய் எடுத்துக்கோ.

இசை: மித்ரன் அந்த புக்கை கொஞ்சம் எடுத்து கொடேன்.

மித்ரன்: சரி அக்கா. நான் எடுத்துட்டு வரேன்.

இனியன்: அது எப்படி? நானும் book -ஐ எடுக்கதான் சொன்னேன். நீங்களும் book- ஐ எடுக்கதான் சொன்னீங்க. நீங்க சொன்ன உடனே எடுத்துட்டு வந்துட்டான். நான் சொன்னா முடியாதுன்னு சொல்றான். அது ஏன்?

உமையாள்: விஷயம் ஒன்னுதான். கேட்ட விதம் வேற.

இசை: இந்த மாதிரியான sentence -ஐ Imperative sentence- ன்னு சொல்லுவாங்க.

இனியன்: Imperative sentence-ஆ அப்படின்னா?

உமையாள்: ஒருத்தரை command அல்லது request மூலமா ஒரு செயலை செய்ய சொல்லுவதுக்கு பேரு Imperative sentence.

இசை: இப்ப நம்ம பேசுனதுல கதவை திறக்கணும் அப்படிங்கறதை ரெண்டு விதமா சொன்னோம்.

உமையாள்: நீ மித்திரனை command மூலமா அந்த செயலை செய்ய சொன்னாய்.

இசை: நான் மித்திரனை request மூலமா அந்த செயலை செய்ய வைத்தேன்.

இனியன்: பெரியவங்க எல்லாரும் நம்ம கிட்ட அப்படிதானே சொல்லுவாங்க.

பாட்டி: சுவாரசியமான topic போயிட்டு இருக்குற மாதிரி தெரியுது?

இனியன்: ஆமாம் பாட்டி Command and Request பத்தி பேசிட்டு இருக்கோம்.

மித்ரன்: யார்கிட்ட எப்படி பேசணும் அப்படிங்கறதை அக்கா சொல்லிக் கொடுத்துட்டு இருந்தாங்க.

பாட்டி: Sentence -ல மொத்தம் நான்கு types இருக்குது.

உமையாள்: Declarative Sentence, Imperative Sentence, Interrogative Sentence, Exclamatory Sentence.

பாட்டி: சாதாரணமா பேசக் கூடிய sentence எல்லாமே Declarative sentence. இதுக்கு subject இருக்கும். இந்த sentence-ல் பெரிய அளவுல உணர்ச்சிகள் இருக்காது.

இசை: ஒரு fullstop உடன் இந்த sentence முடியும்.

உமையாள்: Tense எல்லாமே Declarative sentenceதான்.

பாட்டி: Exclamatory sentence-ல ஆச்சரியம், அதிர்ச்சி போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்துவோம். Exclamation mark-ல் இந்த sentence முடியும்.

பாட்டி: இந்த ரெண்டையும் நாம ஏற்கெனவே நிறைய பார்த்திருக்கிறோம்.

மித்ரன்: நாம பார்க்காதது Imperative sentence மற்றும் interrogative sentence.

பாட்டி: Imperative sentence-ல் command அல்லது request வரும்.

Command type sentence ஆனது verb-ல் தான் ஆரம்பிக்கும். subject வெளியே தெரியாது.

Request type sentence ஆனது please என்ற வார்த்தையில் ஆரம்பிக்கும்.

(தொடரும்)

கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in