

மித்ரன்: பாட்டி நாங்க எல்லாரும் கொஞ்சம் emotional-ஆ இருக்கிறோம்.
பாட்டி: சரி. என்னென்ன type-ல் emotional-ஆ நீங்க இப்போ இருக்கிறீங்கன்னு சொல்லுங்க.
மித்ரன்: பாட்டி நாங்க கவலையா இருக்கிறோம்னு சொல்ல வந்தோம். நீங்க என்னன்னா என்ன type-ன்னு கேக்குறீங்க.
பாட்டி: எல்லாரும் இங்க வாங்க. Emotion-ன்னா என்ன? அத முதல்ல சொல்லுங்க.
இனியன்: Emotion-ன்னா கவலைப்படுறது, feel பண்றது.
பாட்டி: நீங்க சொன்னது-ல emotion என்பது feeling அப்படிங்கிறது சரிதான். ஆனால், கவலைப் படுவதோட மட்டும் emotions-அ சுருக்கி விடக் கூடாது. எத்தனை type of feelings இருக்குது?
இசை: கோவம், அழுகை, மகிழ்ச்சி, ஆரவாரம், சந்தோசம் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
பாட்டி: Then, ஒரே ஒரு type-ல மட்டும்தான் Emotion இருக்குதா?
மித்ரன்: இப்படி நாங்க யோசிக்கவே இல்ல. வருத்தத்தை மட்டும்தான் emotion வெச்சு நிறைய பயன்படுத்தி இருக்கிறோம்.
பாட்டி: சரி. இன்னைக்கு நம்ம பாக்க கூடிய topic நீங்க சொன்ன அதே emotions வச்சுதான் ஆரம்பிக்க போறோம். Exclamatory sentence-னா என்ன?
உமையாள்: Exclamatory sentence-னா திடீரென்று உணர்ச்சிகளை strong-ஆ வெளிப்படுத்துவதுன்னு சொல்லலாம். Exclamatory sentence ஆனது capital letter-ல் தொடங்கி ஆச்சரியக்குறியுடன் (exclamation mark) முடியும்.
பாட்டி: What, How இதெல்லாம் என்ன type of words?
இனியன்: இரண்டும் Question words.
பாட்டி: Exclamatory sentence-ல் What, How இரண்டையும் strong emotion-ஐ வெளிப்படுத்துவதற்காக பயன்படுத்துவோம்.
What a cute baby!
What a beautiful butterfly!
பாட்டி: Exclamatory Adjective-னா என்ன?
இனியன்: Exclamatory sentence-ல வரக்கூடிய adjective பேரு Exclamatory adjective. Am I right?
பாட்டி: Correct. Singular noun வரும் போது a அல்லது an வரும். Plural noun ற்கு a அல்லது an வராது.
What beautiful flowers!
பாட்டி: சில இடங்களில் ஒரு கூட்டத்தையே நாம ஆச்சரியமா பார்ப்போம்.
What a bunch of beautiful pictures!
What a pair of beautiful shoes!
பாட்டி: சில நேரங்களில் Exclamatory sentence-ல் verb-ம் வரும்.
What a strong person he is!
What a happy student you are!
பாட்டி: சில நேரங்களில் நாம் strong ஆன உணர்ச்சிகளை வெளிப்படுத்த How பயன்படுத்துகிறோம். இது Verb உடன் சேர்ந்தும் வரும், சேராமலும் வரும்.
How beautiful!
How cute!
How beautiful she is!
How cute the child is!
(தொடரும்)
கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்