

பாட்டி: Proper noun-ன்னா என்ன? யாராவது சொல்லுங்க பார்க்கலாம்.
இசை: ஒரு குறிப்பிட்ட பொருளை பத்தியோ, மனுஷனை பத்தியோ, இடத்தை பத்தியோ சொல்லுறதுக்கு பேருதான் Proper noun.
பாட்டி: Common noun-ன்னா என்ன?
உமையாள்: பொருட்கள், மனிதர்கள், இடங்கள் இவற்றோட வகையைப் (category) பற்றி சொல்வதுக்கு பேருதான் Common noun.
மித்ரன்: Examples சொல்லுங்களேன் பாட்டி.
பாட்டி: இப்போ உங்களையே எடுத்துக்குவோம். உங்களை நான் எப்படி எல்லாம் சொல்லலாம்?
இசை: boy, girl, student, child இப்படின்னு ஒரு category-ல வகைப்படுத்தி சொல்ல முடியும்.
பாட்டி: இப்படி பொதுவான பெயரில் ஒருத்தரை அழைப்பதை common noun -ன்னு சொல்லுவோம்.
உமையாள்: Iniyan, Isai, Umaiyal, Mithran-ன்னு ஒரு குறிப்பிட்ட பெயரில் அழைப்பதை proper noun ன்னு சொல்லுவோம்.
இசை: Iniyan என்கிற Proper noun-ல் boy என்கிற Common noun அடங்கி இருக்குது.
Isai என்கிற Proper noun-ல் girl என்கிற Common noun அடங்கி இருக்குது.
Umaiyal என்கிற Proper noun-ல் student என்கிற Common noun அடங்கி இருக்குது.
Mithran என்கிற Proper noun-ல் child என்கிற Common noun அடங்கி இருக்குது.
Proper noun வார்த்தைகளுக்கு எப்போதுமே முதல் எழுத்து capital letter-ல் வரும்.
பாட்டி: Common noun வார்த்தைகளுக்கு sentence ஆரம்பிக்கிற இடத்தைத் தவிர மற்ற இடங்களில் முதல் எழுத்தில் capital letter பயன்படுத்துவதில்லை.
பாட்டி: Proper adjective-ன்னா என்னனு உங்களுக்கு தெரியுமா?
மித்ரன்: Proper noun-க்கும் proper adjective-க்கும் connection இருக்கிறது போல தெரியுது.
பாட்டி: Correct. Proper noun-ல்இருந்து பிறந்ததுதான் proper adjective. India என்பது proper noun. Indian என்பது proper adjective.
இசை: America என்பது proper noun. American என்பது proper adjective.
பாட்டி: இப்படி ஒரு குறிப்பிட்ட இடத்தில் வசிக்கிறவங்களை, அந்த இடத்தை முன்னிலைப் படுத்தி அழைக்கிறதுக்கு பேருதான் proper adjective.
பாட்டி: இதே மாதிரி, ஒரு தனி மனிதரின் மேல் ஈர்ப்பு வந்து, அவரைப் பின்பற்றி அதே போல செயல்படுறவங்க இருக்காங்க. இப்படி follow செய்யுறவங்களை, அந்த குறிப்பிட்ட மனிதரின் பெயரை சொல்லி அழைக்க முடியும்.
இப்போ Gautama Buddha-வ எடுத்து கிட்டோம்னா அவருடையகொள்கைகளை பின்பற்றக் கூடியவர்களை Buddhist-ன்னு சொல்லுவோம்.Gautama Buddha என்பது proper noun. Buddhist என்பது proper adjective.
மித்ரன்: Marx உடைய கொள்கையை follow பண்றவங்க Marxist.
இனியன்: Periyar உடைய கொள்கையை follow பண்றவங்க Periyarist.
உமையாள்: Ambedkar உடைய கொள்கையை follow பண்றவங்க Ambedkarite.
(தொடரும்)
கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்