கொஞ்சம் technique கொஞ்சம் English - 70: Quality of adjective பற்றி பார்க்கலாம்!

கொஞ்சம் technique கொஞ்சம் English - 70: Quality of adjective பற்றி பார்க்கலாம்!
Updated on
2 min read

பாட்டி: Adjective-ன்னா noun அல்லது pronoun-க்கு additional information கொடுக்குறதுக்காக பயன்படுத்துறதுன்னு நேத்து பார்த்தோம். Quality of adjective-ன்னா என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?
மித்ரன்: சொல்லுங்க பாட்டி.
பாட்டி: Adjective-ல் ஒரு typeதான் Quality of adjective. Let’s take an example.
Isai is a beautiful girl. இசை ஒரு அழகான பெண்.
இதுல, girl (பெண்) அப்படிங்கிறது noun. Beautiful என்பது அவள் எப்படிப்பட்ட பெண் அப்படிங்கிறதை காட்டுது.
இப்படி noun ஓட குணாதிசயத்தை ரொம்ப தெளிவா விளக்குறதை Quality of adjective அல்லது Descriptive adjective அப்படின்னு சொல்லுறோம்.
இசை: இதில் Beautiful என்பது adjective.
பாட்டி: இந்த example-ஐ எடுத்துக்கோங்க. Mithran is a brave boy. மித்ரன் ஒரு தைரியமான பையன். இதுல, boy அப்படிங்கிறது noun. எப்படிப்பட்ட பையன்னா, தைரியசாலியான (brave) பையன்.
உமையாள்: இதில் Brave என்பது adjective.
மித்ரன்: புரிஞ்ச மாதிரிதான் இருக்குது. examples கொடுங்களேன்.
பாட்டி: இந்த examples எல்லாம் பாருங்க. இப்போ நீங்களே எப்படி adjective இந்த இடத்தில் useful -ஆ இருக்குதுன்னு சொல்லிடுவீங்க.
Mahatma Gandhi is an ambitious leader. மகாத்மா காந்தி ஒரு லட்சியத் தலைவர்.
உமையாள்: மகாத்மா காந்தி ஒரு தலைவர். அவர் எப்படிப்பட்ட தலைவர்ன்னா, லட்சிய கொள்கை கொண்ட தலைவர். இதுல லட்சியம் (ambitious) என்பது adjective
பாட்டி: We had delicious dinner. நாங்கள் சுவையான இரவு உணவு சாப்பிட்டோம்.
இனியன்: இரவு உணவு (dinner) என்பது noun. அந்த உணவு எப்படி இருந்ததுன்னா, சுவையாக இருந்தது. இதுல சுவையாக (delicious) என்பது adjective.
பாட்டி: Delhi is a crowded city. டெல்லி மக்கள் கூட்டம் நிறைந்த நகரம்.
மித்ரன்: டெல்லி என்பது ஒரு நகரம். எப்படிப்பட்ட நகரம்ன்னா, மக்கள் கூட்டம் நிறைந்த நகரம். நகரம் (city) என்பது noun. கூட்டம் (crowded) என்பது adjective.

Assignment
1. That is a brave lion. அது ஒரு துணிச்சலான சிங்கம்.
2. We saw a colourful butterfly. நாங்கள் வண்ணமயமான வண்ணத்துப்பூச்சியைப் பார்த்தோம்.
3. We have to climb a rocky mountain. நாம் பாறைகள் நிறைந்த மலையில் ஏற வேண்டியிருக்கிறது.
4. I kept my books on a wooden table. நான் எனது புத்தகங்களை மரத்தாலான மேசையில் வைத்தேன்.
5. The huge elephant lives in the forest. பெரிய யானை காட்டில் வாழ்கிறது.
6. I drank sour lemon juice. நான் புளிப்பு நிறைந்த எலுமிச்சை சாறை குடித்தேன்.
7. He walked on the green grass. அவன் பசுமையான புல்லின் மீது நடந்தான்
8. Umaiyal is a clever girl. உமையாள் புத்திசாலி பெண்.
9. The rose is a beautiful flower. ரோஜா ஒரு அழகான மலர்.

இந்த sentences-ல் உள்ள Quality of Adjectives எல்லாத்தையும் underline பண்ணுங்க பார்க்கலாம்.
குறிப்பு: Noun அல்லது Pronoun-க்கு additional information (பண்புகள் அல்லது குணாதியசம் சார்ந்து) எந்த word மூலமா கிடைக்குதோ, அதுதான் “Quality of Adjective”.

(தொடரும்)
கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in