

இசை: Whose pen is this?
மித்ரன்: Which pen?
இனியன்: This pen or that pen?
இசை: This pen only.
இனியன்: I think, this is his pen.
மித்ரன்: No, this is her pen.
பாட்டி: ஒரு interesting-கான topic இன்னைக்கு பாக்கலாமா?
உமையாள்: சொல்லுங்க பாட்டி.
பாட்டி: நீங்க இப்போ இந்த pen-ஐ பத்தி பேசிட்டு இருந்தீங்க இல்ல. அதிலேயே நம்ம topic இருக்குது.
மித்ரன்: அப்படியா கேட்கவே ஆசையா இருக்குதே.
பாட்டி: Adjective அப்படிங்கற word கேள்விப்பட்டு இருக்கீங்களா?
உமையாள்: எனக்கு தெரியும் noun-ஐ describe பண்றதுக்கு பயன்படுத்துறதுக்கு பேருதான் adjective.
பாட்டி: சரியா சொன்னீங்க. இப்போ Possessive Adjective யாருக்காவது தெரியுமா? கேள்விப்பட்டு இருக்கீங்களா?
மித்ரன்: இல்ல பாட்டி இது எங்களுக்கு புதுசா இருக்குது.
பாட்டி: இப்போ my pen, his pen, her pen அப்படின்னு ஒரு பொருளுக்கு நீங்க உரிமை கொண்டாடுறீங்க. இப்படி உரிமை கொண்டாடுறதுக்கு பேருதான் Possessive.
இனியன்: ஓ அப்படியா?
பாட்டி: Nounகூட சேர்ந்து வரும் போது இது Possessive Adjective -வா மாறுது.
உமையாள்: ஓ. Possessive Adjective-ல என்னென்னலாம் இருக்குது பாட்டி.
பாட்டி: நம்ம எல்லா subject-க்கும் Possessive Adjective இருக்குது.
இந்த table-ஐ பாருங்க.
மித்ரன்: வேற என்னென்ன typeல எல்லாம் Adjective இருக்குது?
பாட்டி: This pen, That pen என்று சொன்னிங்களே, அதுலயும் Adjective இருக்குது.
இனியன்: அப்படியா? This, That பத்தி சொல்றீங்களா?
பாட்டி: ஆமாம். இதுக்கு பேரு Demonstrative Adjective.
பாட்டி: These, Those இரண்டையும் plural noun க்கு பயன்படுத்துவோம்.
மித்ரன்: ஓ செம்மையா இருக்குது.
பாட்டி: Whose pen? Which Pen? அப்படின்னு ரெண்டு கேள்வி கேட்டீங்கல்ல. இதுலயும் Adjective இருக்குது.
இசை: Whose, Which அப்படிங்கறது Adjective ஆ?
பாட்டி: ஆமாம் இதுக்கு பேரு Interrogative Adjective. Noun கூட சேர்ந்து கேள்வி கேட்கிறதுக்கு இந்த அட்ஜெக்டிவ் பயன்படும்.
மித்ரன்: Adjective இவ்வளவுதானா, இல்லை இன்னும் இருக்குதா?
பாட்டி: Adjective மொத்தம் எட்டு type இருக்குது.
இனியன்: இன்னைக்கு மூணு பார்த்திருக்கிறோம்.
பாட்டி: மீதியை நாளைக்கு பார்க்கலாம்.
(தொடரும்)
கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்