

மித்ரன்: perfect tense - passive voice சொல்லித் தரீங்களா பாட்டி?
பாட்டி: சொல்லித் தரேன் செல்லம். Perfect tense -க்கு என்ன keyword வரும் ஞாபகம் இருக்குதா?
இனியன்: இரு அப்படிங்கறது keyword-ஆ வரும்.
பாட்டி: Passive voice -க்கு என்ன keyword வரும்?
இசை, உமையாள்: Passive voice-க்கு படு, பட்டு என்கிற வார்த்தைகள் keyword-ஆ வரும்.
பாட்டி: Very good. இப்போ perfect tense - passive voice-ல் “இரு”வும் “பட்டு”வும் சேர்ந்து “பட்டிரு” என்ற வார்த்தை keyword -ஆ வரும்.
(தொடரும்)
கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்