

இனியன்: எந்த மாதிரியான இடத்தில் எல்லாம் Passive voice பயன்படுத்தலாம்ன்னு எதாவது வரையறை இருக்குதா பாட்டி?
பாட்டி: இருக்குது கண்ணு. ஒரு விஷயம் இருக்கு, அது செஞ்சது யாருன்னு நமக்கு தெரியலை. அல்லது அதை தெரிஞ்சிக்கணும்னு அவசியம் இல்லை. அந்த இடத்துல பயன்படுத்தலாம்.
இசை: This building is built strong. இந்த கட்டிடம் வலுவாக கட்டப்பட்டுள்ளது.
பாட்டி: ஒரு பொதுவான உண்மை பற்றி பேசக்கூடிய இடத்துல பயன்படுத்தலாம்.
இசை: Festivals are made for the celebration. கொண்டாட்டத்திற்காகவே திருவிழாக்கள் உருவாக்கப்படு கின்றன.
பாட்டி: விஷயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கணும். அந்த விஷயத்திற்கு காரணமான நபர்க்கு முக்கியத்துவம் வேண்டாம்ன்னு நினைக்கிற இடத்துல பயன்படுத்தலாம்.
இசை: park is made for playing. பூங்கா விளை யாடுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
மித்ரன்: Future continuous -க்கு passive voice கிடையாதா?
பாட்டி: Future continuous-ல் ஏற்கெனவே be verb இருக்கிறதால, இன்னொரு தடவை verb வருவது தேவையில்லாத ஒன்று. அதனால பயன்படுத்துறது இல்லை.
மித்ரன்: அப்போ விஷயத்திற்கு மேல ஆர்வம் இருக்கக் கூடிய இடத்துல passive voice வரும்ன்னு சொல்லுங்க.
பாட்டி: மிகவும் சரி.
உமையாள்: Past continuous - Passive voice நாங்களே எழுதிட்டோம், சரியா இருக்குதான்னு பார்த்து சொல்லுங்க பாட்டி.