கொஞ்சம் technique கொஞ்சம் English - 62: Passive voice பற்றி பார்க்கலாம்

கொஞ்சம் technique கொஞ்சம் English - 62: Passive voice பற்றி பார்க்கலாம்
Updated on
2 min read

இனியன்: பாட்டி, உங்களை பார்க்க எங்களோட friends வந்திருக்கிறாங்க.

உமையாள்: உங்களுக்காக story books வாங்கிட்டு வந்திருக்கிறோம் பாட்டி.

பாட்டி: ரொம்ப சந்தோசம் கண்ணுங்களா. உட்காருங்க.

மித்ரன்: உங்ககிட்ட voice கத்துக்கிடலாம்னு வந்திருக்கோம்.

பாட்டி: கண்டிப்பா கத்துக்கலாம். எல்லாருக்கும் புரியும்படி easy-ஆ சொல்லித் தரேன்.

உங்க எல்லாருக்கும் tense நல்லா தெரியும்தானே.

உமையாள்: Yes பாட்டி. 12 types இருக்குது.

பாட்டி: இதை எல்லாத்தையும் active voice-ன்னு சொல்லலாம். இங்கு subject-க்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு செயலை செய்கிறோம். இதை செய்வினை வாக்கியம்னு தமிழில் சொல்லுவோம்.

எப்படி subject-க்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அதேபோல object -க்கும் முக்கியத்துவம், சில நேரம் கொடுப்போம். அப்படி சொல்லக் கூடிய நேரங்களில் passive voice பயன்படுத்த வேண்டும். இதை செயப்பாட்டு வினை வாக்கியம் என்று தமிழில் சொல்லுவோம்.

Tip-1

செயப்பாட்டு வினை வாக்கியத்தில் படு, பட்டு என்கிற வார்த்தைகள் கண்டிப்பாக வரும்.

1. என்னால் இந்த உணவு சாப்பிடப் “படு” கிறது.

2. என்னால் இந்த உணவு சாப்பிடப் “பட்டு” இருக்கிறது.

Tip-2

Past participle மட்டும்தான், passive voice வாக்கியத்தில் verb வரக் கூடிய இடங்களில் பயன்படுத்த வேண்டும். be verbs உடன் இணைந்து past participle வரும்.

(தொடரும்)

கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in