கொஞ்சம் technique கொஞ்சம் English - 61: Should, Must இரண்டும் ஒன்றா அல்லது வேறா?

கொஞ்சம் technique கொஞ்சம் English - 61: Should, Must இரண்டும் ஒன்றா அல்லது வேறா?
Updated on
2 min read

மித்ரன்: Homework நாளைக்கு எழுதிட்டு வந்திடுறேன்னு English mam கிட்ட சொன்னேன்.

அதுக்கு அவங்க You must finish your homework tomorrow-ன்னு சொன்னாங்க.

இன்னைக்கு class எடுத்து முடிச்சிட்டு Maths mam எல்லாரையும் பார்த்து You should finish your homework tomorrow-ன்னு சொன்னாங்க.

இரண்டுக்கும் ஒரே meaningதானே?

இசை: சிறந்தது என்று ஒருவர் நினைக்கக் கூடிய செயல்கள் / பொறுப்புகள் / கடமைகளுக்கு should என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. இதை செய்தால் நன்றாக இருக்கும். செய்யாவிட்டாலும் பரவாயில்லை என்கிற அர்த் தத்தில் சொல்வதே should.

உமையாள்: கட்டாயம்/அவசியம் என்று கருதப்படும் செயல்கள் / பொறுப்புகள்/ கடமைகளுக்கு must என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. இதை கண்டிப்பாக செய்தேஆக வேண்டும். மீறினால், தவறு என்பதை must குறிக்கிறது.

இசை: இந்த இரண்டும் ஒரு helping verb அல்லது auxiliary verb ஆக வரும்.

I should come. நான் வர வேண்டும்.

I must come. நான் கண்டிப்பாக வர வேண்டும்.

கீழே உள்ள Table-ஐ பார்க்கவும்.

இனியன்: Should not, Must not இரண்டிற்கும் கூடாது என்று அர்த்தம்.

.

(தொடரும்)

கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in