கொஞ்சம் technique கொஞ்சம் English-60: Have to, Had to, Can, Could பற்றி பார்க்கலாம்!

கொஞ்சம் technique கொஞ்சம் English-60: Have to, Had to, Can, Could பற்றி பார்க்கலாம்!
Updated on
1 min read

இசை: என்னடா dress எல்லாம் வாங்கியாச்சா?

மித்ரன்: Yes. வாங்கிட்டு வீட்டுக்கு வரவே late ஆயிடுச்சு. Homework எல்லாமே pending ஆயிடுச்சு.

இனியன்: Mam கிட்ட time கேட்கலாம். நீ நாளைக்குக் கூட submit பண்ணிக்கலாம்.

மித்ரன்: Mam சரின்னுதான் சொல்லுவாங்க. எனக்குதான் tension-ஆ இருக்குது.

உமையாள்: எந்த subject எல்லாம் pending-ல இருக்குது?

மித்ரன்: English தவிர எல்லாத்தையும் முடிச்சிட்டேன். பாதி எழுதிட்டேன். மீதி எழுதுறதுக்குள்ளையும் bell அடிச்சிடும்.

இசை: நீ முதல்ல relax ஆகு. இவ்வளவு tension இருந்தா, class-ம் உன்னால சரியா கவனிக்க முடியாது.

இனியன்: இங்க தொட்டு பாரு, எப்படி இவனுக்கு heart படபடன்னு அடிக்குதுன்னு.

இசை: class bell அடிக்க இன்னும் 10 minutesதான் இருக்குது. முதல்ல books எல்லாத்தையும் bag-க்குள்ள வை.

உமையாள்: Mam கிட்ட போய், நேத்து அம்மா கூட கடைக்கு போக வேண்டியிருந்தது. அதனால என்னால் முழுசா முடிக்க முடியலை. ஒரு நாள் time கொடுங்க. நாளைக்கு முடிச்சிட்டு வந்திடுறேன்ன்னு சொல்லு.

இசை: English teacher கிட்ட English-ல தானே சொல்லணும். எப்படி சொல்லணும் எங்க கிட்ட சொல்லு பார்ப்போம்.

மித்ரன்: தெரியல அக்கா. Tension-ஆ இருக்குது.

உமையாள்: நாங்க உனக்கு help பண்ணுறோம்.

இசை: Since I had to go to a dress shop yesterday, I could not complete the homework. Could you give me a day to finish the homework mam?

நேற்று ஒரு துணிக்கடைக்குச் செல்ல வேண்டியிருந்ததால், வீட்டுப்பாடத்தை முடிக்க முடியவில்லை. வீட்டுப்பாடத்தை முடிக்க எனக்கு ஒரு நாள் கொடுக்க முடியுமா மேம்?

உமையாள்: இந்த table-ஐ அப்புறமா, பொறுமையா படிச்சு பாரு. உனக்கு எல்லாம் புரியும்.

(தொடரும்)

கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in