கொஞ்சம் technique கொஞ்சம் English - 57: Off பற்றி விரிவாக பார்போமா?

கொஞ்சம் technique கொஞ்சம் English - 57: Off பற்றி விரிவாக பார்போமா?
Updated on
2 min read

மித்ரன்: Off பற்றி இன்னும் கொஞ்சம் சொல்லுங்களேன்.

இசை: Take off your shoes. உங்கள் காலணிகளை கழற்றுங்கள்

shoes ஐ காலில் இருந்து கழட்டுகிறோம். அதற்கு பிறகு காலுக்கும், shoes ற்கும் உள்ள தொடர்பு அறுந்து போகிறது.

எந்த ஒரு சமயத்தில், இரண்டிற்கும் இடையே உள்ள தொடர்பு துண்டிக்கப் படுகிறதோ அப்போ off பயன்படுத்தணும்.

உமையாள்: Off இந்த மாதிரியான சமயங்களில் detach அல்லது remove என்கிற பொருளைக் கொண்டு வரும்.

இசை:

1. ஒரு பொருளை, இன்னொரு பொருளிடமிருந்தோ, நபரிடமிருந்தோ பிரிக்கிறது. (detach)

2. ஒரு விஷயத்தை இன்னொரு நபரிடமிருந்தோ, பொருளிடமிருந்தோ பிரிக்கிறது. (detach)

3. ஒரு நபரை, இன்னொரு நபரிடமிருந்தோ, பொருளிடமிருந்தோ பிரிக்கிறது. (detach)

உமையாள்:

இந்த examples எல்லாத்தையும் பாரு.

Off - detach

1. The painting is on the wall. ஓவியம் சுவரில் உள்ளது.

He takes the painting off the wall. அவர் சுவரில் இருந்து ஓவியத்தை எடுக்கிறார்.

2. The handle breaks and detaches. கைப்பிடி உடைந்து பிரிகிறது.

The handle breaks off. கைப்பிடி உடைகிறது.

3. A leaf detaches and falls from the tree. ஒரு இலை மரத்திலிருந்து பிரிந்து விழுகிறது.

A leaf falls off the tree. ஒரு இலை மரத்திலிருந்து விழுகிறது.

4. she is on the bike. அவள் பைக்கில் இருக்கிறாள்

she fell off the bike. அவள் பைக்கில் இருந்து கீழே விழுந்தாள்.

மித்ரன்: வேறு எங்கெல்லாம் off ஐ பயன்படுத்தணும்.

இசை: off எனபதற்கு remove என்ற அர்த்தமும் உண்டு ன்னு பார்த்தோம் தானே.

உமையாள்:

1. ஒரு பொருளை, இன்னொரு பொருளிடமிருந்தோ, நபரிடமிருந்தோ நீக்குகின்ற சமயம். (remove)

2. ஒரு விஷயத்தை இன்னொரு நபரிடமிருந்தோ, பொருளிடமிருந்தோ நீக்குகின்ற சமயம். (remove)

3. ஒரு நபரை, இன்னொரு நபரிடமிருந்தோ, பொருளிடமிருந்தோ நீக்குகின்ற சமயம். (remove)

இசை: Look at these examples.

Off - remove

1. He took off the clock. கடிகாரத்தை கழற்றினான்.

2. Take off the thread. நூலை கழற்றவும்

3. He is cleaning dirt off the chair. அவர் நாற்காலியில் உள்ள அழுக்கை சுத்தம் செய்கிறார்.

4. Keep your hands off the food. உங்கள் கைகளை உணவில் இருந்து எடுக்கவும்.

மித்ரன்: super க்கா. வேறு எதுவும் meaning இருக்குதா?

உமையாள்: இன்னும் இருக்குது. சொல்லுறேன் கேளு.

light ஐ போடு அப்டிங்கிறதை English ல எப்படி சொல்லுவோம்.

மித்ரன்: Switch on the light.

உமையாள்: அதே போல, light ஐ அணைச்சிடு அப்டிங்கிறதை Switch off the light ன்னு சொல்லுவோம்.

மித்ரன்: அப்படியே on க்கு opposite ஆ இருக்குதே.

உமையாள்: Correct.

இனியன்: இதுக்கு examples நான் சொல்லுறேன்.

Off - Opposite of on

1 The radio is on and the tv is off. ரேடியோ on ஆகியிருக்கிறது. டிவி off ஆகியிருக்கிறது.

2. The stove is turned off. அடுப்பு அணைக்கப்படுகிறது.

3. The lights are off. விளக்குகள் அணைக்கப்பட்டுள்ளன.

4. Switch off the fan. மின்விசிறியை அணைக்கவும்.

5. The AC is turned off. ஏசி அணைக்கப்பட்டுள்ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in